அரியலூர்
அரியலூர் (ஆங்கிலம்:Ariyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இது அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன.
| அரியலூர் | |||||||
| அமைவிடம் | 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | அரியலூர் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | பொ. இரத்தினசாமி, இ. ஆ. ப [3] | ||||||
| நகராட்சித் தலைவர் | முருகேசன் | ||||||
| சட்டமன்றத் தொகுதி | அரியலூர்
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
27,822 (2001[update]) • 3,651/km2 (9,456/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
7.62 சதுர கிலோமீட்டர்கள் (2.94 sq mi) • 249 மீட்டர்கள் (817 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | http://www.ariyalur.tn.nic.in/ | ||||||
பெயர்க்காரணம்
விஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. அரி+இல்+ஊர்= அரியிலூர். பின்னர் அரியலூர் என்று மருவியது.
தனித்துவம்
இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது. மழையின் அளவு ஆண்டுக்கு 1096mm cement city
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,827 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அரியலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரியலூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
அரியலூர் சிமெண்ட் ஆலைகள்
- டான்செம் (TANCEM)(tamilnadu cement corporation limited) அரசு நகர். இது ஒரு அரசு நிருவனம் ஆகும். 1979ல் நிறுவப்பட்டது.↓[1]
- ராம்கோ சிமென்ட் (RAMCO CEMENT)கோவிந்தபுரம். 1997ம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்டது. துவக்கத்தில் 0.9 மில்லியன் டன் (MTPA)(வருடத்திற்க்கு) உற்ப்பத்தி செய்யத்துவங்கிய ஆலை தற்ப்பொது 3 மில்லியன் டன்(MTPA)(வருடத்திற்க்கு) உற்ப்பத்தி செய்கிறது. இந்தியாவிலேயே நான்கு இலை விருது(Four Leaves Award) வாங்கிய ஒரே நிறுவனம் ஆகும்.↓[2]
- டால்மியா சிமெNட் (Dalmia Cement) தாமரைக்குளம். 2012ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் 2012 பசுமை விருது (Green Award-2012), 2012ம் ஆண்டிற்க்கான செஐஐ விணைதிறன் யூனிட் விருதும் (CII ENERGY EFFICIENT UNIT AWARD-2012ஆக ஓராண்டில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளது.↓[3]
- செட்டிநாடு சிமெண்ட் (CETTINAD CEMENT) கீழப்பலுயூர்.
- அல்ட்ரா டெக் சிமெண்ட்(ALTRA TECH CEMENT) (ADITHYA BIRLA GROUP) ரெட்டிப்பாளையம்.
- இந்தியா சிமெண்ட் (COROMANDEL KING-SANKAR SAKTHI) தளவை.
கல்லூரிகள்
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியலூர்.
- அரசு பொறியியல் கல்லூரி, அரியலூர்.
கோயில்
அரியலூரில் அரியலூரில் உள்ளது. இக்கோயிலிலுள்ள தசாவதாரச் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Ariyalur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)