பெரம்பலூர்

91.143.46.13 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 10:20, 6 திசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்

பெரம்பலூர் (ஆங்கிலம்:Perambalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

பெரம்பலூர்
—  நகரம்  —
பெரம்பலூர்
அமைவிடம்: பெரம்பலூர், தமிழ் நாடு , இந்தியா
ஆள்கூறு 11°14′N 78°53′E / 11.23°N 78.88°E / 11.23; 78.88
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் பெரம்பலூர்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி பெரம்பலூர்
மக்களவை உறுப்பினர்

அருண் நேரு

சட்டமன்றத் தொகுதி பெரம்பலூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

எம். பிரபாகரன் (திமுக)

மக்கள் தொகை 29,698 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் http://www.perambalur.tn.nic.in/ www.municipality.tn.gov.in/perambalur, http://www.perambalur.tn.nic.in/

பெயர் விளக்கம்

பெரும்பல்லூர் என்னும் பெயர் மருவிப் பெரம்பலூர் என்று ஆகியுள்ளது. இம்மாவட்டத்திலுள்ள வேறு சில ஊரின் பெயர்களை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை விளங்கும். பெரும்பல்லூர் < பெரம்பலூர். குறும்பல்லூர் < குரும்பலூர். இளம்பல்லூர் < இளம்பலூர். இருவூர் < இரூர் (இரு = பெரிய). குறுவூர் < குரூர். (சங்ககாலத்தில் இளம்புல்லூர்க் காவிதி என்னும் புலவர் ஒருவர் இருந்தார்)

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°14′N 78°53′E / 11.23°N 78.88°E / 11.23; 78.88 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,698 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பெரம்பலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரம்பலூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "Perambalur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  2. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=பெரம்பலூர்&oldid=190236" இலிருந்து மீள்விக்கப்பட்டது