பெரியகுளம்
பெரியகுளம் (ஆங்கிலம்:Periyakulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்கு 100 ஆண்டு காலம் பழமையும் பெருமையும் வாய்ந்த விக்டோரியா நினைவு ஆண்கள் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது.[சான்று தேவை]
| பெரியகுளம் | |||||||
| ஆள்கூறு | 10°07′N 77°33′E / 10.12°N 77.55°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | தேனி | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | மரு. வைத்தீநாதன், இ. ஆ. ப [3] | ||||||
| நகர்மன்றத் தலைவர் | ஓ. ராஜா | ||||||
| சட்டமன்றத் தொகுதி | பெரியகுளம்
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை | 42,039 (2001[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 282 மீட்டர்கள் (925 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°07′N 77°33′E / 10.12°N 77.55°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 282 மீட்டர் (925 அடி) உயரத்தில் இருக்கின்றது.
வரலாறு
பாண்டியர்களின் ஆட்சியில் இருந்த இப்பகுதி பின்பு நாயக்கர் ஆட்சி காலத்தில் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்த அப்பாச்சி கவுண்டர் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் கன்னடம், மற்றும் தெலுங்கு பேசும் தொட்டிய நாயக்கர்கள் அதிக அளவில் உள்ளனர் .[5]
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 42,039 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பெரியகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரியகுளம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர்>ஆவார்கள்.
கோயில்கள்
- அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்: கி.பி. 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாம் இராஜேந்திர சோழனால் இந்த ஆலயம் கட்டப்பட்டது. [சான்று தேவை]
- அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில்
- வீச்சுகருப்பையா கோயில்
- மீனாட்சி அம்மன் கோயில்
- பெருமாள் கோயில்
- காளஸ்திரி கோயில்
- பகவதி அம்மன் கோயில்
போன்ற முக்கிய கோவில்கள் உள்ளது
சோத்துப்பாறை அணை
பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு கொடைக்கானல் மலை சிகரத்தில் இருந்து நீர் வருகிறது. இது பெரியகுளம் மக்களின் முக்கிய குடிநீர் தேவையை பூர்த்திச் செய்கிறது. இந்த மலையிலிருந்து சுமார் 7 கீ.மீ தூரத்தில் கன்னக்கரை என்ற ஊரும் அங்கிருந்து சுமார் 10 கீ.மீ தூரத்தில் அகமலை என்ற கிராமமும் உள்ளது. கன்னக்கரை வரை மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும் அதற்கு மேல் உள்ள அகமலையை அடைய நடந்துதான் செல்ல முடியும்.
வராக நதி
வராக நதி பெரியகுளம் நகரை இரண்டாகப் பிரிக்கிறது. ஒரு பகுதி வடகரை மற்றொரு பகுதி தென்கரை என இரண்டு பிரிவாக பிரிப்பதால் மக்கள் வடகரை, தென்கரை என்று அழைக்கிறார்கள். இந்த நதி சோத்துப்பாறையில் இருந்து உபரி நீராக வருகிறது. இங்கு எப்பொழுதும் நீர் வற்றாமல் ஓடிக்கொண்டே இருப்பதால் இதை வற்றாத நதி என்றும் காலப்போக்கில் வராக நதி என்றும் அழைக்கிறார்கள். இது பெரியகுளம் வழியாக சென்று வடுகபட்டி, மேல் மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் வழியாக சென்று வைகை ஆற்றில் கலக்கிறது.
தீர்த்த தொட்டி
ஊரின் மேற்கு பகுதியில் பாலசுப்புரமணி கோவிலின் பின்பகுதியில் இது உள்ளது. இந்த தொட்டியிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள கைலாசநாதர் மலைகோயிலில் இருந்து பூமியின் அடிப்பகுதி வழியாக நீர் வருவதாக கூறப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை இங்கு திருவிழா நடைபெறுகிறது.[சான்று தேவை]
கும்பக்கரை நீர்வீழ்ச்சி
இங்கு கும்பக்கரை அருவி எனும் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இது பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சரியாக 9 கி.மீ தூரத்தில் உள்ளது. கும்பக்கரையிலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்தில் கொடைக்கானல் மலைச் சிகரம் உள்ளது.[சான்று தேவை]
முதலமைச்சர்
- இந்த ஊரைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றி வருகிறார். இவர் 1996 - 2001 ஆம் ஆண்டுக் காலங்களில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Periyakulam". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)
வெளி இணைப்புகள்
இங்கு 100 ஆண்டு காலம் பழமையும் பெருமையும் வாய்ந்த விக்டோரியா மகாராணியின் நினைவைப் போற்றும் படி நிறுவப்பட்ட அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இப்பகுதி மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப் பட்டு இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் மனதை மயக்கும் வண்ணம் உள்ளது. வராக நதி எனும் வற்றாத நதி இங்கு உள்ளது.இந்நதி பெரியகுளத்தை,வடகரை மற்றும் தென்கரை என இரு பகுதிகளாக பிரிக்கின்றது.