மானாமதுரை (ஆங்கிலம்:Manamadurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மானாமதுரை
மானாமதுரை
அமைவிடம்: மானாமதுரை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°42′N 78°29′E / 9.7°N 78.48°E / 9.7; 78.48
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி மானாமதுரை

-

சட்டமன்ற உறுப்பினர்

ஆ. தமிழரசி (திமுக)

மக்கள் தொகை 26,284 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


70 மீட்டர்கள் (230 அடி)

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9°42′N 78°29′E / 9.7°N 78.48°E / 9.7; 78.48 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 70 மீட்டர் (229 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,284 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆனோர் ஆண்களும் 50% ஆனோர் பெண்களும் ஆவர். மானாமதுரை மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 81% உம் பெண்களின் கல்வியறிவு 68% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. மானாமதுரை மக்கள் தொகையில் 12% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.

இவ்வூரின் சிறப்பு

இப்பகுதியிலுள்ள களிமண் வளம் மிக்கதாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் கலை நயமுள்ள பொம்மைகள், பூ தொட்டி, மண் பானை, கொடியடுப்பு, செங்கல், கூரை ஓடு, கடம் எனும் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை.[6][7][8]

மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது. [9]

மருத்துவமனைகள்

  • தொழுநோய் சுகாதார மருத்துவமனை, தயாபுரம்
  • அரசு மருத்துவமனை
  • ஜெயபால் மருத்துவமனை
  • சிவராஜ் மருத்துவமனை
  • பாலம்மாள் மருத்துவமனை
  • சுந்தராஜன் மருத்துவமனை
  • உண்ணாமலை அம்மாள் மருத்துவமனை
  • ஓம் சக்தி மருத்துவமனை

கல்வி நிறுவனங்கள்

பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள்

  • ஆனந்தவள்ளி - சோமநாதர் ஆலயம்
  • பார்த்திபனூர் வைகை மதகு அணைக்கட்டு (வேதியரேந்தல்)
  • தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோவில் (19 கி.மீ)
  • திரு இருதய ஆண்டவர் ஆலயம் (4 கி.மீ)
  • பிரத்யங்கரா தேவி கோவில் (வேதியரேந்தல்)

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Manamadurai". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  5. "2001 ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  6. மானாமதுரை மண்பாண்டம்
  7. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pongal-keeps-pot-industry-alive/article676432.ece
  8. http://newindianexpress.com/cities/bangalore/article520709.ece?service=print
  9. மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மானாமதுரை&oldid=192733" இலிருந்து மீள்விக்கப்பட்டது