கயத்தாறு
கயத்தார் (ஆங்கிலம்:Kayatharu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
| கயத்தார் | |
| — பேரூராட்சி — | |
| அமைவிடம் | 8°57′32″N 77°47′43″E / 8.9587558°N 77.7953053°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | விசு மகாஜன், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை | 9,497 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
வரலாற்று நிகழ்வுகள்
பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்த வீரபாண்டிய கட்டபொம்மனை
அக்டோபர் 16 , 1799, அன்று இவரை இவ்வூரில் தான் தூக்கிலிடப்பட்டார்.
வீரபாண்டி கட்டபொம்மனின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவிடம் இவ்வூரில் உள்ளது. இந்த நினைவிடம் அக்டோபர் 16 1970 ஆம் ஆண்டு அன்று பத்மஸ்ரீ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் சிலை நிருவப்பட்டு, திரு N.சஞ்சீவ ரெட்டி M.P அவர்கள் விழாத் தலைவராகவும். மற்றும் காங்கிரஸ் பெருந்தலைவர் திரு கு. காமராஜ் M.P அவர்களால் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடம் தேசிய நெடுஞ்சாலையும் உள்ளூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பில் இந்த நினைவிடம் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9497 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கயத்தார் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கயத்தார் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)