மதுக்கூர்
மதுக்கூர் (ஆங்கிலம்:Madukkur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மதுக்கூர் மக்கள் கோழிக்கறி தேவை ஏற்பட்டால் அரசன் பிராய்லரை அணுகி நல்ல கோழிகளை பெற்றுக் கொள்வர் இங்கு விலையும் குறைவு தரமோ அதிகம்[4]
| மதுக்கூர் | |
| — பேரூராட்சி — | |
| அமைவிடம் | 10°29′N 79°24′E / 10.48°N 79.4°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | இரா. ரேவதி, இ. ஆ. ப [3] |
| பெருந்தலைவர் | பஷீர் அஹமது |
| மக்கள் தொகை | 15,171 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 3 மீட்டர்கள் (9.8 அடி) |
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°29′N 79°24′E / 10.48°N 79.4°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 மீட்டர் (9 அடி) உயரத்தில் இருக்கின்றது.
அரசியல்
இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. [6]
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,171 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 47% ஆண்கள், 53% பெண்கள் ஆவார்கள். மதுக்கூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுக்கூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மதுக்கூரில் புகழ்பெற்றவர்கள்
- அத்தி கோ. இராமலிங்கம், பேச்சாளர், இலக்கியவாதி
- மரைக்காயர் - இவரது பெயர் முகமது யாக்கூப் மரைக்காயர். இலக்கியத்தில் உரையாடுவதில், அழகிய தமிழில் பேசுவதில் சிறந்தவர். மதுக்கூர் சுற்று வட்டாரம் முழுவதும் புகழ்பெற்றவர். இவரை 'மதுக்கூர் கம்பன்' என்று அழைத்து வந்தனர்.
- மதுக்கூர் மஜீத் - இவரது முழுப்பெயர் அப்துல் மஜீத். மதுக்கூர் சுற்று வட்டாரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தனது பழக்க வழக்கத்தால் பரிச்சயமானவர். இஸ்லாமிய பாடல்கள் சொந்தமாக தானே இயற்றி பாடி, பல மேடை கச்சேரிகள் செய்து வந்துள்ளார். சிங்கப்பூர் மலேசியாவிலும் கச்சேரிகள் செய்து வந்துள்ளார்.
- மதுக்கூர் கண்ணன் - அல்லிதந்த வானம் அன்னையல்லவா, சொல்லி தந்த பூமி தந்தையல்லவா..என்ற வரிகளை தமிழ் உலகிற்கு தந்தவர் தான் 'மதுக்கூர் கண்ணன்'. யார் திரைப்படத்தை இயக்கியதால்இவரை 'யார்கண்ணன்' என்றும் அழைக்கிறார்கள்.
- மதுக்கூர் இராமலிங்கம் - தமிழகம் முழுவதும் பல மேடைகளிலும் லியோனியுடன் சேர்ந்து பல பட்டிமன்றங்களில் பேசி இன்றும் இலக்கிய பணியில் வாழ்ந்து வருகிறார்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21
- ↑ "Madukkur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)