ஆலந்துறை

imported>Kannanwiki89 பயனரால் செய்யப்பட்ட 12:34, 4 ஏப்பிரல் 2014 அன்றிருந்தவாரான திருத்தம் (பெயர்க்காரணம்)

'ஆலாந்துறை (ஆங்கிலம்:Alanthurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இவ்வூர், கோவை மாவட்டத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆலந்துறை (ஆலாந்துறை)
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 7,173 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பெயர்க்காரணம்

துறை என்பது ஆற்றங்கரையில் அமைந்த ஊர்களைக்குறிக்கும்.நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த காரணம் பற்றி இப்பெயர் பெற்றிருக்கலாம்.

கல்வி, மொழி மற்றும் கலாச்சாரம்

தமிழ் மொழியே பெரும்பாலும் முதன்மை மற்றும் நாளாந்த மொழியாக உள்ளது. இளைய தலைமுறையினர், ஆங்கிலம் அறிந்தவர்களாக உள்ளனர். கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. வளர்த்துவரும் குறு நகராகவும் உள்ளது. பெருவாரியான உணவகங்கள்,அரசு மற்றும் இந்திய வங்கிகள் உள்ளது.அருகே உள்ள நாதேகவுண்டன் புதூரில் பொறியியல் கல்லூரியும் இச்சிறிய நகரைசுற்றி தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன.மாரி அம்மன் கோவில் சிறப்பு வாய்ந்தது.மேலும் வருமான வரி அலுவலகம் இங்குதான் உள்ளது.பலதப்பட்ட மக்கள் வசிக்கும் குறு நகரமாக வளர்ந்து வருகிறது.பழனி பாதயாத்திரை (பாதைபயணம்) மற்றும் சபரி மலை பாதயாத்திரை (பாதைபயணம்) செல்வோர் எண்ணிக்கை இப்பகுதியில் அதிகம்.

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு

வேளாண்மை முதன்மை தொழில். மேலும் வேளாண் சார்த்த தொழில்கள், ஆலாந்துறை முதன்மை சாலையில் அமைந்துள்ளதால் தேநீர் விடுதி, அடுமனை முதலானவையும் இங்கு நடைபெறுகின்றன.


மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7173 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஆலாந்துறை மக்களின் சராசரி கல்வியறிவு 55% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 46% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. ஆலாந்துறை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Retrieved அக்டோபர் 19. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=ஆலந்துறை&oldid=201928" இலிருந்து மீள்விக்கப்பட்டது