வெங்கரை

imported>Almighty34 பயனரால் செய்யப்பட்ட 14:34, 5 செப்டெம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்

வெங்கரை (ஆங்கிலம்:Venkarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. காவிரி ஆறு மற்றும் ராஜ வாய்க்கால் பாய்வதால் பேரூராட்சி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கும். நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை ஆகியவை முக்கிய வேளாண் பயிர்களாகும்.

வெங்கரை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் பரமத்தி வேலூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,330 (2011)

1,435/km2 (3,717/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6.5 சதுர கிலோமீட்டர்கள் (2.5 sq mi)
குறிப்புகள்
  • www.townpanchayat.in/vengarai

அமைவிடம்

வெங்கரை பேரூராட்சி நாமக்கல்லிருந்து 32 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் திருச்சி 90 கிமீ; மேற்கில் திருச்செங்கோடு 35 கிமீ; வடக்கில் நாமக்கல் 32 கிமீ; தெற்கில் கரூர் 33 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

6.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 35 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,702 வீடுகளும், 9,330 மக்கள்தொகையும் கொண்டது. [4]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. வெங்கரை பேரூராட்சியின் இணையதளம்
  4. Venkarai Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=வெங்கரை&oldid=203086" இலிருந்து மீள்விக்கப்பட்டது