மீனம்பட்டி
மீனம்பட்டி ( meenampatti)
சிவகாசி தாலுகா ,அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ளது.சிவகாசியில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.சிவகாசி-சாத்தூர் செல்லும் வழியில் உள்ளது. விருதுநகரில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது. போக்குவரத்து வழிகள் :பஸ்;சிவகாசி-சாத்தூர். ரயில்:மதுரை-சிவகாசி, மதுரை-சாத்தூர் பள்ளி: அரசு உயர்நிலைப்பள்ளியில் 500 மாணவர்கள் பயிலுகின்றனர்.10ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சிறப்பான முறையில் கற்று தருகின்றனர் . ஆர்.சி.துவக்கப்பள்ளி:இது ஒரு சிறுபான்மை பள்ளி ஆகும்.200 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலுகின்றனர். 10ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சிறப்பான முறையில் கற்று தருகின்றனர்.
கோவில்கள்:
10ற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அந்தோணியார் கோவில் முதலில் உள்ளது.தென் தமிழகத்தில் முதல் முறையாக புனித அண்ணை தெரசாவிற்கு கோவில் உள்ளது. தொழில்;
பட்டாசு முதன்மைத் தொழிலாக உள்ளது.சுமார்.20ற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. 1000 குடும்பங்கள் நேரடியாக இதில் ஈடுபட்டு உள்ளன. 500 குடும்பங்கள் மறைமுக வேலை வாய்ப்பை பெற்று உள்ளனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையம்; எங்கள் ஊரில் அரசின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசின் அனைத்து மருத்துவ உதவிகளும் சிறப்பான முறையில் வழங்கப்படுகின்றன.