அகா அருவி
அகா அருவி (Akaa Falls) மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது. கொஃபோரிடுவாவிற்கு வடகிழக்கே 21 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அகுபெம் வடக்கு மாவட்டத்தில் உள்ள அக்யெரெமண்டெங் கிராமத்திற்கு அருகில் இந்த அருவி அமைந்துள்ளது.[1] அழகான நீர்வீழ்ச்சியைத் தவிர இங்குள்ள அசாதாரணமான பாறை அமைப்புகளும் பார்ப்பதற்கு ஓர் அற்புதமான காட்சியாகும். நீரின் அளவு அதிகமாக இல்லாத வறட்சிக் காலங்களில் இந்தப் பாறைகளின் அழகு இன்னும் அதிகமாகத் தெரியும்.
| ஆக்கா அருவி Akaa Falls | |
|---|---|
![]() | |
| அமைவிடம் | ஆகா , அகுபெம் வடக்கு மாவட்டம், கிழக்கு மண்டலம், கானா |
| ஆள்கூறு | 6°10′30″N 0°11′46″W / 6.17503°N 0.19614°W |
போடி நீர்வீழ்ச்சியிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அகா அருவி அதற்கான நீரை போடி ஆற்றில் இருந்து எடுக்கிறது. போடி அருவியும் அதற்கான நீரை போடி ஆற்றில் இருந்தே எடுக்கிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ "Akaa Falls" (in en-gb). Graphic Online. https://www.graphic.com.gh/news/general-news/ghana-news-akaa-falls.html.
- ↑ "Visit Ghana - Akaa Falls". Visit Ghana (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-01-30.
