அகாத்னா

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 15:05, 10 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (புவியியல்: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அகாத்னா (Hagåtña), முன்னதாக ஆங்கிலத்தில் அகான (Agana) மற்றும் எசுப்பானியத்தில் அகன்ன (Agaña) ஐக்கிய அமெரிக்க ஆட்புலமான குவாமின் தலைநகரமாகும். 18ஆம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை, இது குவாமின் மக்கள்தொகை மிகுந்த இடமாக இருந்தது; ஆனால் தற்போது இது இரண்டாம் மிகக் குறைந்த பரப்பும் மக்கள்தொகையும் உள்ள சிற்றூராக உள்ளது. இருப்பினும் இது அரசின் ஆட்சிபீடமாக இருப்பதுடன் தீவின் முதன்மையான வணிக மாவட்டங்களில் ஒன்றாக விளங்குகின்றது.

அகாத்ன

அகான / அகன்ன

சிற்றூர்
Skyline view of modern Hagåtña as seen from Fort Apugan, which overlooks the town
சான்டா அகுயுடா கோட்டையிலிருந்து தற்கால அகாத்ன
குவாம் ஆட்புலத்தில் அகாத்ன (அகான) இருக்குமிடம்
குவாம் ஆட்புலத்தில் அகாத்ன (அகான) இருக்குமிடம்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
ஆட்புலம்குவாம்
அரசு
 • நகரத் தந்தைஜான் ஏ. குரூசு (ஆர்)
பரப்பளவு
 • மொத்தம்1 sq mi (3 km2)
மக்கள்தொகை
 (2010)[1]
 • மொத்தம்1,051
நேர வலயம்ஒசநே+10 (கமோர்ரோ நேரம்)
சிப் குறியீடுகள்
96910, 96932 (அஞ்சல் பெட்டி)
இடக் குறியீடு671

புவியியல்

அகாத்னா குவாமின் மேற்கு கடலோரத்தில் அகாத்ன ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அமெரிக்க கணக்கெடுப்பு வாரியத்தின் தரவுகளின்படி இதன் பரப்பளவு 1 சதுர மைல் (2.6 கி.மீ.²) ஆகும். வடக்கில் அகான விரிகுடாக் கடற்கரையும் கிழக்கில் அகான ஆறும் அதன் நஞ்செய் நிலங்களும் தெற்கில் மலைச்சிகரமும் (இதன் மேலே அகான ஐய்ட்சு என்ற சிற்றூர் உள்ளது) எல்லைகளாக உள்ளன. பல மீயுயர் அலுவலகக் கட்டிடங்கள் சிற்றூரின் மையத்தில் உள்ளன. மேற்கு புறத்திலுள்ள அனிகுவா எனப்படும் நகர்ப்புறம் வதிவிட வட்டாரமாக உள்ளது. மற்றபல சிற்றூர்களைப் போலல்லாது அகாத்னவின் மையப்பகுதி வளாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது; அங்காடிகளும் உணவகங்களும் அனைத்து வளாகங்களிலும் பரந்துள்ளன. மிகுந்த மக்கள் வாழும் மொங்மொங்-டொடோ-மைத், சினஜனா, அகான ஐய்ட்சு போன்ற சிற்றூர்கள் அகாத்னவைச் சூழ்ந்துள்ளன.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=அகாத்னா&oldid=236419" இலிருந்து மீள்விக்கப்பட்டது