அனினி

imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 07:30, 8 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அனினி (Anini), வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இது இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு வடகிழக்கே 562 கிலோ மீட்ட ர் தொலைவிலும்; அசாம் மாநிலத்தின் திப்ருகர் நகரத்திற்கு வடகிழக்கில் 382 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதன் அருகே அமைந்த நகரம் ரோயிங் நகரம் 235 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரத்தில் இடு மிஷ்மி மொழி பேசும் மலைவாழ் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.

அனினி

மாவட்டத் தலைமையிடம் & பேரூராட்சி
Anini carved on hill
அனினி நகரத்தின் வான்பரப்புக் காட்சி
அனினி is located in அருணாசலப் பிரதேசம்
அனினி
அனினி
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அனினியின் அமைவிடம்
அனினி is located in இந்தியா
அனினி
அனினி
அனினி (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°47′53″N 95°54′13″E / 28.79806°N 95.90361°E / 28.79806; 95.90361
நாடு இந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்மேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம்
வருவாய் வட்டம்அனினி வட்டம்
ஏற்றம்
1,968 m (6,457 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,384
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
792101
தொலைபேசி குறியீடு எண்03801
ஐஎசுஓ 3166 குறியீடுIN
கோப்பென் காலநிலை வகைப்பாடுகடல்சார் காலநிலை#ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை
இணையதளம்https://dibangvalley.nic.in/tourist-place/anini/

புவியியல்

 
திரி ஆற்றின் மீதான பாலம்
 
டிபாங் பள்ளத்தாக்கில் அனினி வட்டம்

திபாங் பள்ளத்தாக்கில் அமைந்த அனினி வட்டத்தில் திபாங் ஆறு பாய்கிறது. திபாங் வனவிலங்கு சரணாலயத்திற்கு தெற்கில் அனினி நகரம் அமைந்துள்ளது. கிழக்கு இமயமலைத் தொடரின் அமைந்த அனினி நகரம், கடல்மட்டத்திலிருந்து 1968 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 621 குடும்பங்கள் கொண்ட அனினி பேரூராட்சியின் மக்கள் தொகை 2,384 ஆகும். அதில்1,316 ஆண்கள் மற்றும் 1,068 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.96% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 812 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.05% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 0% மற்றும் 51.22 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 52.77%, இசுலாமியர் 2.22%, பௌத்தர்கள் 1.64%, கிறித்தவர்கள் 6.38% மற்றும் பிற சமயத்தினர் 37.70% வீதம் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அனினி&oldid=245460" இலிருந்து மீள்விக்கப்பட்டது