அப்பாத்தா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Saranbiotech20 பயனரால் செய்யப்பட்ட 14:36, 6 பெப்பிரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

அப்பாத்தா ( அப்பா + ஆத்தா = அப்பாத்தா ) என்ற தமிழ்ச்சொல் ஆனது மதுரைத் தமிழ் பேச்சு வழக்கில் உள்ள ஒரு சொல் ஆகும். இச்சொல்லில் பகுதியாக உள்ள அப்பா என்ற வேர்ச்சொல் தந்தையை குறிக்கும் . விகுதியான ஆத்தா என்பது தாயை குறிக்கும் . இச்சொல் தந்தையை ஈன்ற தாய் என்ற உறவு முறையைக் குறிப்பது. கொங்கு தமிழில்[1], குமரி தமிழில் மற்றும் ஈழத்தில் இந்த உறவு முறையை அப்பம்மா என்று கூறுவர். திருநெல்வேலியில் அப்பாச்சி (அப்பா வழி ஆச்சி) என்ற சொல்லும் வழக்கில் உள்ளது. சில இடங்களில் "ஐயம்மா" என்றும் அழைப்பர். தஞ்சைப் பகுதியில் அப்பாயி[2] என்றும் வழங்குகிறார்கள். சிலர் ஆயா என்றும் அழைப்பார்கள். அம்மாவை ஈன்ற தாயையும் ஆயா என்று அழைப்பதால், சில நேரங்களில் எந்த தாய் என்ற குழப்பங்கள் ஏற்படும்.

மேற்கொள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அப்பாத்தா&oldid=248950" இலிருந்து மீள்விக்கப்பட்டது