அமெசைட்டு

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 03:15, 27 பெப்பிரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அமெசைட்டு (Amesite) என்பது Mg2Al2SiO5(OH)4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[2]

அமெசைட்டு
Amesite
படிமம்:Amesite-190280.jpg
பொதுவானாவை
வகைபைலோசிலிக்கேட்டு
காவோலினைட்டு-செர்பெண்டைன் குழு
வேதி வாய்பாடுMg2Al2SiO5(OH)4
இனங்காணல்
நிறம்வெள்ளை, நிறமற்றது, இளஞ்சிவப்பு முதல் இளஞ்சிவப்பு வரை, வெளிர் பச்சை
படிக இயல்புபடிகங்கள் குறுகலான நீளமான போலி அறுகோண பட்டகங்களாக தட்டையாக உருவாகின்றன
படிக அமைப்புமுச்சரிவச்சு
இரட்டைப் படிகமுறல்ஆறு மடங்கு பிரிவு இரட்டை {001} மற்றும் பல்வகை செயற்கைபாலிசிந்தெடிக் இரட்டை இணையாக {010}
பிளப்புசரி பிளவு {001}
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2.5–3
மிளிர்வுமுத்து போன்றது
கீற்றுவண்ணம்வெண்மையும் வெளிர் பச்சையும்
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும் முதல் ஒளிபுகும் வரை
ஒப்படர்த்தி2.77
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.597 nβ = 1.599 nγ = 1.615
இரட்டை ஒளிவிலகல்δ = 0.018
பிற சிறப்பியல்புகள்காவோலிணைட்டு-செர்பெண்டைன் குழு
மேற்கோள்கள்[1][2][3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் அமெசைட்டு கனிமத்தை Ame[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

அமெசைட்டு முச்சரிவச்சு படிக அமைப்பில் படிகமாகிறது.[5] இது செங்கோணங்களில் இல்லாமல், சமமற்ற நீளமுள்ள மூன்று அச்சுகளைக் கொண்டுள்ளது. அமெசைட்டு முதன்முதலில் 1876 ஆம் ஆண்டு மாசசூசெட்சின் ஆம்ப்டன் மாகாணத்திலுள்ள் செசுட்டர் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது.[3][2] சுரங்க உரிமையாளர் இயேம்சு அமெசின் நினைவாக கனிமத்திற்கு அமெசைட்டு எனப் பெயரிடப்பட்டது. அதிக அலுமினியம் மற்றும் மக்னீசியம் உள்ளடக்கம் கொண்ட பாறைகளைப் பாதிக்கும் குறைந்த தர உருமாற்ற சூழலில் அமெசைட்டு கனிமம் தோன்றுகிறது. பல்வேறு இடங்களில் வெசுவைனைட்டு, குளோரைட்டு மேக்னடைட்டு, உரூட்டைல், டயாசுபோர், குரோசுலர், கால்சைட்டு, டையோப்சைடு மற்றும் கிளினோசோயிசைட்டு ஆகிய கனிமங்களுடன் தொடர்பு கொண்டதாக சேர்ந்து காணப்படுகிறது.[1]

அமெசைட்டு என்பது ஓர் அசாதாரண சிலிக்கேட்டு கனிமமாகும், இது உலகளவில் பல்வேறு இடங்களிலிருந்து கிடைப்பதாகப் பதிவாகியுள்ளது. இயற்கையாகத் தோன்றும் 6ஆர் பல்வடிவ வகை மூன்று எண்முகி 1:1 அடுக்கு சிலிக்கேட்டாக அமெசைட்டு கனிமம் கருதப்படுகிறது.[6]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Handbook of Mineralogy
  2. 2.0 2.1 2.2 Mindat.org
  3. 3.0 3.1 Webmineral data
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  5. Roberts, W.L. (1974) Encyclopedia of Minerals, p. 18. Van Nostrand Reinhold Company, New York, New York.
  6. Hall, Stephen H; Bailey, S.W. (5 January 1976). "Amesite From Antartica" (in en-US). American Mineralogist 61: 497–499. http://www.minsocam.org/ammin/AM61/AM61_497.pdf. பார்த்த நாள்: 28 October 2022. 
"https://tamilar.wiki/w/index.php?title=அமெசைட்டு&oldid=249617" இலிருந்து மீள்விக்கப்பட்டது