அனோரினசு

Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:11, 16 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
அனோரினசு
படிமம்:Two Bushy-crested Hornbills (Anorrhinus galeritus) in a tree.jpg
புதர்க் கொண்டை இருவாய்ச்சி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அனோரினசு
சிற்றினம்

உரையினைக் காண்க

வேறு பெயர்கள்

திலோலேமசு

அனோரினசு (Anorrhinus) என்பது தென்கிழக்கு ஆசியாவின் காடுகளில் (இந்தியா மற்றும் சீனாவின் அருகிலுள்ள பகுதிகளுக்கு அரிதாகவே நீண்டுள்ளது) காணப்படும் இருவாய்ச்சி (குடும்பம் புசெரோடிடே) பேரினமாகும் . இவை சமூகமாகவும் பொதுவாகக் குழுக்களாகவும் காணப்படுகின்றன. ஆனால் ஆதிக்கம் செலுத்தும் இணை மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் என்று நம்பப்படுகிறது. பிற குழு உறுப்பினர்கள் உதவியாளர்களாகச் செயல்படுகிறார்கள்.

வகைப்பாட்டியல்

இந்த பேரினமானது சில சமயங்களில் புதர்-முகடு இருவாய்ச்சி சிற்றினத்துடன் மட்டுமே மட்டுப்படுத்தப்படுகிறது. பிற சிற்றினங்கள் இரண்டும் சில சமயங்களில் ஒரே இனமாகக் கருதப்படுகின்றன. இவை திலோலேமசு பேரினத்தில் வைக்கப்படுகின்றன. 2013-ல் வெளியிடப்பட்ட ஒரு மூலக்கூறு தொகுதிப் பிறப்பு ஆய்வில், அனோரினசு, ஆந்தரகோசெரசு மற்றும் ஓசிசெரோசு வகைகளைக் கொண்ட ஒரு தொகுதியின் சகோதர பேரினமாகக் கண்டறியப்பட்டது.[1]

இந்தப் பேரினமானது மூன்று சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[2]

படம் அறிவியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
படிமம்:Bird White throated Brown Hornbill (cropped).jpg அனோரினசு ஆஸ்டெனி ஆசுடெனின் பழுப்பு இருவாய்ச்சி வடகிழக்கு இந்தியா மற்றும் தெற்கில் வியட்நாம் மற்றும் வடக்கு தாய்லாந்து
படிமம்:Tickells Brown Hornbill (Anorrhinus tickelli) with food in beak.jpg அனோரினசு திக்கெல்லி திக்கெல் பழுப்பு இருவாய்ச்சி மியன்மார் மற்றும் அதை ஒட்டிய மேற்கு தாய்லாந்து
படிமம்:Anorrhinus galeritus (12737603485).jpg அனோரினசு கேலரிடசு புதர்க் கொண்டை இருவாய்ச்சி புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து

மேற்கோள்கள்

  1. Gonzalez, J.-C.T.; Sheldon, B.C.; Collar, N.J.; Tobias, J.A. (2013). "A comprehensive molecular phylogeny for the hornbills (Aves: Bucerotidae)". Molecular Phylogenetics and Evolution 67 (2): 468–483. doi:10.1016/j.ympev.2013.02.012. 
  2. Gill, Frank; Donsker, David, eds. (2019). "Mousebirds, Cuckoo Roller, trogons, hoopoes, hornbills". World Bird List Version 9.2. International Ornithologists' Union. Retrieved 24 July 2019.
"https://tamilar.wiki/w/index.php?title=அனோரினசு&oldid=251434" இலிருந்து மீள்விக்கப்பட்டது