ஆதி தாளம்

imported>Saranbiotech20 பயனரால் செய்யப்பட்ட 17:05, 14 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஆதி தாளம் கர்நாடக இசையில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் தாளம் ஆகும். இந்த இசையில் 75% கிருதிகள் ஆதி தாளத்துக்கே அமைக்கப்பட்டுள்ளன.[1].

ஏழு தாள வகைகளுள் திரிபுடை தாளம் வகையைச் சேர்ந்த இத் தாளம், ஒரு லகுவையும், இரண்டு திருதங்களையும் உறுப்பாகக் கொண்டது. இத் தாளத்தின் லகு ஒரு தட்டும் மூன்று விரல் எண்ணிக்கையும் கொண்ட சதுஸ்ர லகு.[2] இதனால் "ஆதி" தாளம் சதுஸ்ர சாதி திரிபுடை தாளம் ஆகும்.

கர்நாடக இசை கற்கத் தொடங்கும் மாணவர்களுக்கு ஆதி தாளமே முதலில் கற்பிக்கப்படும் தாளம் ஆகும். ஆதி தாளத்தின் முதல் உறுப்பான லகுவில் நான்கு கால அலகுகளும், அடுத்து வரும் இரண்டு திருதங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு கால அலகுகளுமாக மொத்தம் எட்டுக் கால அலகுகள் உள்ளன. கர்நாடக இசை கற்றலில் முதல் பாடமான சுரவரிசை கற்கும்போது ஸ, ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழு சுரங்களுடன் மேல் ஸ்தாயியில் வரும் ஸ் சையும் சேர்த்து எட்டு சுரங்களை ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் ஆதி தாளத்துடன் மாணவர்கள் பாடிப் பழகுவர்.

மேற்கோள்கள்

  1. T.N.Chitra's information on Adi Tala on the Indian Heritage website
  2. [1]|ஆதி-தாளம்-தனி-ஆவர்தனம்-பி
"https://tamilar.wiki/w/index.php?title=ஆதி_தாளம்&oldid=263297" இலிருந்து மீள்விக்கப்பட்டது