ஆலகாலம்

imported>Rasnaboy பயனரால் செய்யப்பட்ட 18:23, 15 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (படத்தைச் சேர்த்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஆலகாலம் (Halahala) என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் மிகவும் கொடிய விசமாகும். இந்த விசமானது அமுதம் வேண்டி அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடையும் பொழுது, கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி பாம்பு வலி தாங்காமல் கக்கிய விசமாகும்.

படிமம்:Myths of the Hindus & Buddhists - Shiva drinking the World-Poison.jpg
சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்துவதைக் காட்சிப்படுத்தும் ஓவியம்

இந்த விசம் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் அழிக்க வல்லதாகவும், அதனால் சிவபெருமான் அதை உண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. அவ்வாறு சிவபெருமான் ஆலகாலத்தினை அருந்திய போது, அது வயிற்றுக்குள் செல்லாமல் இருக்க உமையம்மை சிவபெருமான் கழுத்தினை பிடித்தாகவும், அதனால் விசம் கண்டத்திலேயே தங்கி நீல நிறமாக கண்டம் ஆகியதாகவும் புராணம் சொல்கிறது.[1][2][3]

ஆலகாலம் அசுரர்களையும், தேவர்களையும், முனிவர்களையும் துரத்தி வந்த காலத்தினை பிரதோச காலம் என்று சைவர்கள் கூறுகிறார்கள். இந்நிகழ்வு சனிக்கிழமையன்று நிகழ்ந்ததால் சனி பிரதோசம் வெகு சிறப்பான நாளாக கருதப்படுகிறது.

காண்க

கருவி நூல்

மச்ச புராணம்

மேற்கோள்கள்

  1. "KALAKUTA (कालाकुता) Meaning in Nepali & English - Nepali Names". www.nepalinames.com (in ஆங்கிலம்). Retrieved 2 May 2024.
  2. The Presence of Siva By Stella Kramrisch
  3. TQ Team C0118142. "The Orient: Shiva's Blue Throat". Library.thinkquest.org. Archived from the original on 2013-11-24. Retrieved 2013-05-13.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆலகாலம்&oldid=267958" இலிருந்து மீள்விக்கப்பட்டது