இலால்பேட்டை

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 15:08, 8 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: கிமீ → கி.மீ. (3) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

லால்பேட்டை (Lalpet) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

லால்பேட்டை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
வட்டம் காட்டுமன்னார்கோயில்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

16,561 (2011)

1,222/km2 (3,165/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 13.55 சதுர கிலோமீட்டர்கள் (5.23 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/lapettai

திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை எண் 227-இல் காட்டுமன்னார் கோயிலில் இருந்து 3 கிலோ மீட்டர் அருகில் உள்ளது.

அமைவிடம்

கடலூர் - சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 227ல் அமைந்த காட்டுமன்னார் கோயிலிருந்து 3 கிலோ மிட்டர் தொலைவில் லால்பேட்டை உள்ளது. லால்பேட்டையிலிருந்து கடலூர் 60 கி.மீ.; இதன் கிழக்கே சிதம்பரம் 22 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

13.55 சகி.மீ. பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 49 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,355 வீடுகளும், 16,561 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 83.8% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,017 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 589 மற்றும் 1 ஆகவுள்ளனர்.[5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. [ http://www.townpanchayat.in/lapettai லால்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்]
  5. Lalpet Population Census 2011

ஊரைப்பற்றி

"https://tamilar.wiki/w/index.php?title=இலால்பேட்டை&oldid=284932" இலிருந்து மீள்விக்கப்பட்டது