ஈசா குகா
ஈசா குகா (Isa Guha, பிறப்பு: மே 21 1985), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 80 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 - 2011 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1]
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஈசா குகா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 21 மே 1985 இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தேர்வு அறிமுகம் (தொப்பி 137) | ஆகத்து 14 2002 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசித் தேர்வு | பிப்ரவரி 15 2008 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப அறிமுகம் (தொப்பி 94) | ஆகத்து10 2001 எ. ஸ்கொட்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி ஒநாப | சனவரி 9 2011 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப சட்டை எண் | 19 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, சனவரி 20 2011 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது முன்னோர்கள் சில தலைமுறைகளுக்கு முன், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பிரித்தானியாவுக்குக் குடியேறியவர்கள்.[2] 5' 1" உயரம் கொண்ட இந்த மிதவேக வீச்சாளர் தற்போது ஐபிஎல் உரையாளராக பணியாற்றி வருகிறார்.
சொந்த வாழ்க்கை
செப்டம்பர் 16, 2018 அன்று, குகா தனது நீண்டகால காதலரான பிரிட்டிஷ் இசைக்கலைஞர் ரிச்சர்ட் தாமஸை மணந்தார். ரிச்சர்ட் தாமஸ், பிரதர் & போன்ஸ் இசைக்குழுவின் உறுப்பினர்.[3]
சர்ச்சை
2024 ஆம் ஆண்டில், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ராவை வர்ணனையின் போது "மிகவும் மதிப்புமிக்கப் முதனி" என்று குறிப்பிட்டதால், குகா ஒரு சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவர் பும்ராவிடம் மன்னிப்பு கேட்டார்.[4]
மேற்கோள்கள்
- ↑ Isa Guha ESPN Cricinfo
- ↑ Qureshi, Huma (2012-10-10). "Isa Guha: 'England is leading the way in women's cricket'" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/lifeandstyle/2012/oct/10/isa-guha-england-womens-cricket.
- ↑ "These dreamy pictures from ex-English cricketer Isa Guha's wedding are bound to make your day". Daily News & Analysis. 21 September 2018. https://www.dnaindia.com/sports/photo-gallery-these-dreamy-pictures-from-ex-english-cricketer-isa-guha-s-wedding-are-bound-to-make-your-day-2665899.
- ↑ Ng, Kelly (16 December 2024). "Commentator Isa Guha sorry for calling cricketer 'primate'". BBC News. https://www.bbc.com/news/articles/cn9gy7938xeo.