உமாஸ்ரீ

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 06:00, 25 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: கன்னட திரைப்பட → கன்னடத் திரைப்பட using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
உமாஸ்ரீ
குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர்
பதவியில்
மே 20, 2013 – மே 15, 2018
முன்னையவர்கலகப்பா ஜி. பாண்டி
பின்னவர்ஜெயமாலா
கன்னட கலாச்சாரத்துறை அமைச்சர்
பதவியில்
20 மே ,2013 – 15 மே, 2018
முன்னையவர்கோவிந்த் எம். கர்ஜோல்
பின்னவர்ஜெயமாலா
அமைச்சர்
பதவியில்
17 மே 2013 – 15 மே 2018
முன்னையவர்சித்து சாவடி
பின்னவர்சித்து சாவடி
தொகுதிதெர்தல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
உமாஸ்ரீ

10 மே 1957 (1957-05-10) (அகவை 69)
நோனாவினகரே,திப்தூர், தும்கூர் மாவட்டம்,
கருநாடகம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்நடிகர் (1978-present)
அரசியல்வாதி (-present)

உமாஸ்ரீ (Umashree பிறப்பு 10 மே 1957) ஓர் இந்திய நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். கன்னட மொழியில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படமான குலாபி டாக்கீசில் குலாபி கதாப்பத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். 2013 ஆம் ஆண்டில் கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினரானார்.[1] சித்தராமையாவின் அரசாங்கத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலத்துறை, கன்னட மொழி மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சரானார்.[2][3]

சொந்த வாழ்க்கை

உமாஸ்ரீ தேவாங்கர் குடும்பத்தில் பிறந்தவர்.[4][5] இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், மகள் காயத்ரி, பல் மருத்துவராகவும், மகன் விஜயகுமார் வழக்குரைஞராகவும் உள்ளார்.

சமூகப் பணி

கிராமப்புற மற்றும் பின்தங்கிய பெண்களுக்கு ஆதரவளிப்பது போன்ற சமூக நடவடிக்கைகளில் கலந்துகொண்டுள்ளார். கிராமப்புற பெண்களின் தேவைகளை முன்னிலைப்படுத்த மேடை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். 2013 இல் தெர்தல் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உமாஸ்ரீ பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, கன்னட மொழி மற்றும் கலாச்சார அமைச்சராக உள்ளார்.

சான்றுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=உமாஸ்ரீ&oldid=290094" இலிருந்து மீள்விக்கப்பட்டது