ஆள்கூறுகள்: 34°20′N 74°36′E / 34.333°N 74.600°E / 34.333; 74.600

உளர் ஏரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 22:17, 28 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.9.2)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
உவுளர் ஏரி
Wular Lake
உவுளர் ஏரி
அமைவிடம்சம்மு காசுமீர்,  இந்தியா
ஆள்கூறுகள்34°20′N 74°36′E / 34.333°N 74.600°E / 34.333; 74.600
பூர்வீக பெயர்جھیل ولر Error {{native name checker}}: parameter value is malformed (help)
முதன்மை வரத்துசீலம் ஆறு
முதன்மை வெளியேற்றம்சீலம் ஆறு
வடிநில நாடுகள் இந்தியா
அதிகபட்ச நீளம்16 கிலோமீட்டர்
அதிகபட்ச அகலம்9,6 கிலோமீட்டர்[1]
மேற்பரப்பளவு12 முதல் 100 மீட்டர்
அதிகபட்ச ஆழம்14 மீட்டர்
கடல்மட்டத்திலிருந்து உயரம்1580 மீட்டர்
Islandsஜைனுல் மெலிந்தா
குடியேற்றங்கள்பண்டிபோரா

உவுளர் ஏரி அல்லது ஊலர் ஏரி (Wular Lake) ஆசியா கண்டத்தில் இருக்கும் மிகப் பெரிய நன்னீர் ஏரியாகும் [2]. இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டத்தில் [3] அமைந்துள்ள இந்த ஏரி கண்டத்தட்டு நகர்வியல் செயல்பாடு மூலம் உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது. பீர் பஞ்சல் தொடரில் உற்பத்தியாகி சீலம் ஆறு இந்த ஏரியின் வழியாக பாய்ந்து பாக்கித்தானை அடைகிறது. ஏரியின் பரப்பளவு காலநிலைக்கு ஏற்ப 12 - 100 சதுரமைல் (30 - 260 சதுர கிலோமீட்டர்) அளவுக்கு மாறுபடுகிறது. ஏரியின் கரையில் 1950 ஆம் ஆண்டுகளில் நடப்பட்ட வில்லோ மரங்களின் விளைவாக ஏரி வறண்டு கொண்டு வருவதாக கருதப்படுகிறது.[4]

பெயரியல்

பண்டைய காலத்தில் உவுலர் ஏரி மகாபத்மசர் என்று அழைக்கப்பட்டது. இந்து மத புராணங்களும் இதை மகாபத்மசரசு என்றே குறிப்பிடுகின்றன. மகாபத்மசரசை போலோர் என்று அல்-பிருனி (கி.பி 960-1031) குறிப்பிடுகிறார். ஏரியின் பெரிய பரிமாணமும் நீரின் அளவும் பிற்பகல்களில் அதிக பாய்ச்சல் கொண்ட அலைகள் உருவாக வழிவகுக்கின்றன. சமசுகிருதத்தில் இந்த அலைகளுக்கு உல்லோலா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் பொருள் "புயல் வேக பாய்ச்சலில் உயரும் அலைகள் என்பதாகும். எனவே இந்த ஏரியை உல்லோலா ஏரி என்று அழைப்பதும் பொருந்தும். இதுவே அல் பிருனி காலத்தில் போலோர் என்றும் பின்னாளில் படிப்படியாக ஊலர் அல்லது உவுலர் என்றும் மருவியிருக்கலாம் [5][6].காசுமீரி மொழிச் சொல்லான 'வுல்' என்பதும் இதன் தோற்றத்திற்கு காரணமாக இருக்கலாம். அதாவது வுல் என்ற சொல்லுக்கு இடைவெளி அல்லது பிளவு என்ற பொருள் காசுமீரி மொழியில் குறிக்கப்பட்டுள்ளது.

இயற்கை வரலாறு

ராம்சர் தளமாக நியமிக்கப்பட்ட 37 இந்திய ஈரநிலங்களில் இந்த ஏரியும் ஒன்றாகும். இருப்பினும் நீர்ப்பிடிப்பு பகுதிகளின் பெரும்பகுதி விவசாய நிலமாக மாறுவது, உரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளால் மாசுபடுதல், காட்டுக்கோழி மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளை வேட்டையாடுதல் மற்றும் ஏரியிலேயே களை தொற்று உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களை இந்த ஏரி எதிர்கொள்கிறது [7].

சான்றுகள்

  1. "Slide 1" (PDF). Archived from the original (PDF) on 2011-10-09. Retrieved 2012-11-07.
  2. "Can mistake that ruined majestic Kashmir lake be fixed?". Retrieved 29 August 2018.
  3. "Map of Wular Lake and Associated Wetlands" (PDF). Retrieved 29 August 2018.
  4. Wular Lake (India)[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Ramsar Sites of disputed territory: Wular Lake, Jammu and Kashmir, World Wide Fund for Nature, India, 1994, ... The name "Vulla" from which the present name Wular or Volar (Vulgo Woolar) seems to have been derived, is found in the Janarajas chronicle and can be interpreted as 'turbulent' or the lake with high-going waves' ...
  6. Imperial Gazetteer of India, Sir William Wilson Hunter, pp. 387, Clarendon Press, 1908, ... Wular Lake - Lake in Kashmir State ... bad reputation among the boatmen of Kashmir, for when the winds come down the mountain gorges, the quiet surface of the lake changes into a sea of rolling waves ... corruption of ullola, Sanskrit for 'turbulent' ... The ancient name is Mahapadmasaras, derived from the Naga Mahapadma, who is located in the lake as its tutelary deity ...
  7. "Wular Lake". World Wide Fund for Nature India. Archived from the original on 2 June 2009. Retrieved 17 March 2010.
"https://tamilar.wiki/w/index.php?title=உளர்_ஏரி&oldid=293000" இலிருந்து மீள்விக்கப்பட்டது