எச்டி 90156
எதிப 90156 (HD 90156) என்பது கடற்பாம்பு விண்மீன் தொகுப்பில் தோராயமாக 73 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 7 ஆவது பருமை G-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இந்த விண்மீன் சூரியனை விட சிறியதும் குளிர்ச்சியானதும் மங்கலானதும் ஆகும். இது குறைவான பொருண்மை கொண்டது. மேலும் அதன் பொன்ம(உலோக) உள்ளடக்கம் சூரியனை விட பாதிக்கு மேல் உள்ளது. 2009 ஆம் ஆண்டில், விண்மீனைச் சுற்றி ஒரு வளிமப் பெருங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
| நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
|---|---|
| பேரடை | Hydra |
| வல எழுச்சிக் கோணம் | 10h 23m 55.275s[1] |
| நடுவரை விலக்கம் | –29° 38′ 43.91″[1] |
| தோற்ற ஒளிப் பொலிவு (V) | 6.947 |
| இயல்புகள் | |
| விண்மீன் வகை | G5V |
| தோற்றப் பருமன் (B) | 7.572 |
| தோற்றப் பருமன் (J) | 5.685 |
| தோற்றப் பருமன் (H) | 5.382 |
| தோற்றப் பருமன் (K) | 5.245 |
| B−V color index | 0.625 |
| வான்பொருளியக்க அளவியல் | |
| ஆரை வேகம் (Rv) | 26.4 கிமீ/செ |
| Proper motion (μ) | RA: –38.02 ± 0.46[1] 6 மிஆசெ/ஆண்டு Dec.: 99.61 ± 0.47[1] மிஆசெ/ஆண்டு |
| இடமாறுதோற்றம் (π) | 44.74 ± 0.49[1] மிஆசெ |
| தூரம் | 72.9 ± 0.8 ஒஆ (22.4 ± 0.2 பார்செக்) |
| தனி ஒளி அளவு (MV) | 5.226 |
| விவரங்கள் | |
| திணிவு | 0.99 M☉ |
| ஆரம் | 0.87 ± 0.05 R☉ |
| ஒளிர்வு | 0.698 ± 0.03 L☉ |
| வெப்பநிலை | 5670 ± 100 கெ |
| வேறு பெயர்கள் | |
| தரவுதள உசாத்துணைகள் | |
| SIMBAD | data |
| NStED | data |
| Extrasolar Planets Encyclopaedia | data |
இந்த விண்மீனைக் காம்மா அன்ட்லியே என்று லாக்கெய்ல் பெயர்வைத்தார், மேலும் கோல்ட் அதை அந்த விண்மீன் தொகுப்பில் வைத்திருக்க விரும்பினார். இருப்பினும், 1930 இல் விண்மீன் எல்லைகளை வரையறுத்ததன் மூலம் அது கடர்பாம்புக் குழுவுக்கு மாற்றப்பட்டது. [2]
2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு 5 வானியல் அலகுகளுக்கு மேல் திட்டமிடப்பட்ட தொலைவில் விண்மீன் இணைகள் இருப்பதை தவிர்த்துள்ளது. [3]
கோள் அமைப்பு
| துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
|---|---|---|---|---|
| b | ≥17.98 ± 1.46 M⊕ | 0.250 ± 0.004 | 49.77 ± 0.07 | 0.31 ± 0.10 |
மேலும் காண்க
- சூரியப் புறக்கோள்களின் பட்டியல்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. http://www.aanda.org/articles/aa/full/2007/41/aa8357-07/aa8357-07.html.Vizier catalog entry
- ↑ Wagman, Morton (2003). Lost Stars: Lost, Missing and Troublesome Stars from the Catalogues of Johannes Bayer, Nicholas Louis de Lacaille, John Flamsteed, and Sundry Others. Blacksburg, VA: The McDonald & Woodward Publishing Company. p. 29. ISBN 978-0-939923-78-6.
- ↑ Mugrauer, M.; Ginski, C. (12 May 2015). "High-contrast imaging search for stellar and substellar companions of exoplanet host stars". Monthly Notices of the Royal Astronomical Society 450 (3): 3127–3136. doi:10.1093/mnras/stv771. Bibcode: 2015MNRAS.450.3127M. https://academic.oup.com/mnras/article/450/3/3127/1063872. பார்த்த நாள்: 19 June 2020.
- ↑ Mordasini, C. et al. (2011). "The HARPS search for southern extrasolar planets XXIV. Companions to HD 85390, HD 90156, and HD 103197: a Neptune analog and two intermediate-mass planets". Astronomy and Astrophysics 526: A111. doi:10.1051/0004-6361/200913521. Bibcode: 2011A&A...526A.111M. http://www.aanda.org/articles/aa/full_html/2011/02/aa13521-09/aa13521-09.html.