அ. தேவராஜ்
அ. தேவராஜ் என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]. இவர் 1991 ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகச் செய்யார் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]. இவர் மொத்த வாக்கு சதவீதமான 72.36% வாக்குகளில் 60.59% வாக்குகளைப் பெற்றார். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை விட 35,955 வாக்குகள் அதிகம் பெற்றார்.[4]
இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது , செய்யார் நகரத்திற்குச் சிப்காட் தொழிற்துறையைக் கொண்டு வரக்கோரி சட்டமன்றத்தில் பேசினார். மேலும் அதற்கான இடங்களை வாங்குவதற்கான ஒப்புதலையும் பெற்றார்.[சான்று தேவை]
இவர் சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1991ஆம் ஆண்டு சூலை 13 ஆம் நாள் தமிழகச் சட்டமன்றத்தில் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6]
சான்றுகள்
- ↑ https://archive.today/20130218013022/http://arthriticknees.info/news/A.Devaraj.html Website Arthritic Knees
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 301-302.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ http://www.travelindia-guide.com/assembly-elections/tamil-nadu/tiruvannamalai-constituencies/cheyyar.aspx Website Travel India
- ↑ http://eci.nic.in/eci_main/electionanalysis/AE/S22/partycomp50.htm 1.தமிழ்நாடு தேர்தல் ஆணையம்-செய்யாறு
- ↑ "2" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-22.
- ↑ 3.