கலீலாபாத்

imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 07:52, 2 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement | name = கலீலாபாத் | other_name = | image_skyline = City of Khalilabad.jpg | image_alt = | image_caption =கலீலாபாத் நகரம் | pushpin_map = India Uttar Pradesh | pushpin_label_position = left | pushpin_map_alt = | settlement_type = நகரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கலீலாபாத் (Khalilabad), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் பிரதேசத்தில் அமைந்த சந்த் கபீர் நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். அயோத்தி-கோரக்பூர் செல்லும் சாலையில், கோரக்பூருக்கு 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது பிரதாப்கர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டது.

கலீலாபாத்

கலீலாபாத் நகரம்
கலீலாபாத் நகரம்
கலீலாபாத் is located in உத்தரப் பிரதேசம்
கலீலாபாத்
கலீலாபாத்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலீலாபாத் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°47′N 83°04′E / 26.78°N 83.07°E / 26.78; 83.07
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சந்து கபீர் நகர் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்26 km2 (10 sq mi)
ஏற்றம்
69 m (226 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்47,847
 • அடர்த்தி1,042/km2 (2,700/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி,ஆங்கிலம்,உருது, அவதி மொழி
 • பிரதேசம்அவத்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
272175
வாகனப் பதிவுUP-58
இணையதளம்https://sknagar.nic.in/

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25 வார்டுகளும், 7,291 குடியிருப்புகளும் கொண்ட கலீலாபாத் நகரத்தின் மக்கள் தொகை 47,847 ஆகும். அதில் 25,154 ஆண்கள் மற்றும் 22,693 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.11% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 902 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.06% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 13.18% மற்றும் 0.04% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 68.79%, இசுலாமியர் 30.08%, சமணர்கள், பௌத்தர்கள், கிறித்தவர்கள் 0.26%, சீக்கியர்கள் 0.39% மற்றும் பிற சமயத்தினர் 0.45% வீதம் உள்ளனர்.[1]

போக்குவரத்து

சாலைகள்

தேசிய நெடுன்சாலை எண் 27 மற்றும் 28ஏ கலீலாபாத் நகரம் வழியாகச் செல்கிறது.

தொடருந்து நிலையம்

கோரக்பூர்-லக்னோ இருப்புப்பாதையில் கலீலாபாத் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கலீலாபாத்&oldid=318567" இலிருந்து மீள்விக்கப்பட்டது