கியானி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 02:02, 31 சூலை 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ('கியானி' என்று அழைக்கப்படும் குறிப்பிடத்தக்க நபர்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஒரு பழைய சீக்கிய ஆசிரியரின் உருவப்படம்

கியானி (Gyani or Giani, பஞ்சாபி : ਗਿਆਨੀ ) என்பது சீக்கிய சமயத்தில் கற்றறிந்த ஒருவர் மற்றும் அர்தாஸ் போன்ற பிரார்த்தனைகளில் அல்லது பாடலில் ( கீர்த்தனை ) அவையை வழிநடத்துபவரைக் குறிக்கப் பயன்படுத்தும் ஒரு மரியாதைக்குரிய சீக்கிய பட்டமாகும். gyan என்ற சொலுக்கு பஞ்சாபியில் "அறிவு" என்று பொருளாகும். இது சமசுகிருதச் சொல்லான ஞானம் என்பதிலிருந்து வந்தது. எனவே "கியானி" என்பவர் ஆன்மீக மற்றும் சமய அறிவைக் கொண்டவர், மேலும் புனித நூல்களையும் சமயத்தின் வரலாற்றையும் புரிந்துகொள்வதில் சத் சங்கத் சபைக்கு உதவக்கூடியவர்.

பண்புகள்

சீக்கிய சமயம் இரு பாலினத்தவருக்கும் சம உரிமைகளை வழங்குவதால், கியானி என்பவர் ஆணாகவோ அல்லது பெண்ணோகவோ இருக்கலாம். அவர் கல்வி அல்லது சமய கல்வி நிறுவனத்தில் தீவிரமான படிப்பை மேற்கொண்டவராக இருப்பார். சீக்கிய புனித நூலான குரு கிரந்த் சாகிப்பைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற்றிருப்பார். மேலும் புனித நூலில் உள்ள சொற்களை எளிய நடைமுறை மொழியில் மொழிபெயர்க்கும் திறனைப் பெற்றிருப்பார். கியானிகளை ஆங்கிலத்திலும் தொடர்பு கொள்ள முடியும் (அப்படி கட்டாயம் இல்லை), இது புனித நூல்களின் மொழியான பஞ்சாபி அல்லது குர்முகியை சரளமாக அறியாத மேற்கத்திய குழந்தைகளுக்கு ஒரு பெரிய வசதியாகும். சமயச் சூழல்களில், ஒரு கியானியை பிரம்ம கியானி என்றும் அழைப்பர்.

கியானி என்பது பஞ்சாபி இலக்கியத்தில் வழங்கப்படும் ஒரு கல்விப் பட்டமாகும்.[1]

'கியானி' என்று அழைக்கப்படும் குறிப்பிடத்தக்க நபர்கள்

மேற்கோள்கள்

  1. A Popular Dictionary of Sikhism from W. Owen Cole and Piara Singh Sambhi, Curzon Press, p.68, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0700710485
"https://tamilar.wiki/w/index.php?title=கியானி&oldid=326934" இலிருந்து மீள்விக்கப்பட்டது