கிருஷ்ணம்
கிருஷ்ணம் என்பது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய மலையாள குடும்ப நாடக திரில்லர் திரைப்படம் ஆகும். இப்படத்தினை தயாரித்த பி.என்.பாலராமின் கதையை தினேஷ் பாபூ திரைகதை எழுதி இயக்கியிருந்தார்.
| கிருஷ்ணம் | |
|---|---|
| இயக்கம் | தினேஷ் பாபூ |
| தயாரிப்பு | பி. என். பலராம் |
| கதை | தினேஷ் பாபூ |
| இசை |
|
| நடிப்பு |
|
| ஒளிப்பதிவு | தினேஷ் பாபூ |
| படத்தொகுப்பு | அபிலாஷ் பாலச்சந்திரன் |
| கலையகம் | பிஎன்பி சினிமாஸ் |
| விநியோகம் | பிஎன்பி சினிமாஸ் |
| வெளியீடு | 18 மே 2018 (India) |
| நாடு | இந்தியா |
| மொழி | மலையாளம் |
இப்படத்தில் அக்ஷய் கிருஷ்ணன், அஸ்வர்யா உல்லாஸ், சாய் குமார், சாந்தி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். [1] [2] இந்த படம் 2018 மே 18 அன்று இந்தியாவில் திரையரங்குகளிலும், இணைய செயலியிலும் வெளியிடப்பட்டது. [3] இதன் தமிழ் பதிப்பு 15 மார்ச் 2019 இல் வெளியிடப்பட்டது.
சுருக்கம்
கிருஷ்ணம் திரைப்படம் கேரள மாநிலத்தின் திருச்சூரில் நிகழ்ந்த உண்மையான சம்பவத்தின் அடிப்படை கதையாக கொண்டது. இப்படம் தந்தை மற்றும் மகனின் ஆழ்ந்த மற்றும் ஆச்சரியமான உறவை சித்தரிக்கிறது.
நடிகர்கள்
- அக்ஷய் கிருஷ்ணன்
- அஸ்வர்யா உல்லாஸ்
- மமிதா பைஜு
- அக்ஷய்ஸ் நண்பராக அன்கித் ஹரிகிருஷ்ணன்
- அக்ஷய்ஸின் தந்தையாக சாய் குமார்
- அக்ஷய்ஸ் தாயாக சாந்தி கிருஷ்ணா
- அக்ஷயின் நண்பராக ஷரோன் தாமஸ்
- ரென்ஜி பானிகர்
- வி.கே.பிரகாஷ்
- முகுந்தன்
- அஞ்சலி நாயர்
- விஜயகுமார் [4]
ஒலிப்பதிவு
இத்திரைப்படத்திற்கு ஹரி பிரசாத் மூன்று மொழிகளில் இசையமைத்துள்ளார். பதினொரு பாடல்களுக்கு ஒன்பது பாடகர்களால் பதிவு செய்யப்பட்டது.
- "மஜா மேகம்" - விஜய் யேசுதாஸ்
- "தூ மஞ்சு" - வினீத் ஸ்ரீனிவாசன்
- "மது மது" - திப்பு
மேற்கோள்கள்
- ↑ "Krishnam is a Malayalam movie". Times of India.
- ↑ "Krishnam cast and crew". plumeriamovies. Archived from the original on 2019-01-04. Retrieved 2021-06-08.
- ↑ "Four new Malayalam releases today (May 18)". சிஃபி. 18 May 2018. Archived from the original on 19 மே 2018. Retrieved 25 May 2018.
- ↑ "Krishnam cast and crew". Now Running. Archived from the original on 2021-06-08. Retrieved 2021-06-08.