கென் தெடிஸ்

imported>Ksmuthukrishnan பயனரால் செய்யப்பட்ட 02:41, 26 பெப்பிரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கென் தெடிஸ் அல்லது பஞ்சி அனுசபதி (ஆங்கிலம்: Ken Dedes இந்தோனேசியம்: Ken Dedes; ஜாவானியம்: ꦏꦺꦤ꧀ꦝꦼꦝꦼꦱ꧀, Kèn Ḍĕḍĕs) என்பவர் இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் இந்தியமயமாக்கப்பட்ட இந்து-பௌத்த இராச்சியமான சிங்காசாரி இராச்சியத்தின் முதல் அரசி; சிங்காசாரியின் முதல் ஆட்சியாளர் கென் அரோக்கின் மனைவி ஆவார்.[1]

கென் தெடிஸ்
Ken Dedes
Panji Anusapati
படிமம்:Prajnaparamita Java Side Detail.JPG
சிங்காசாரி கோயிலுக்கு அருகில் 1818-இல் கண்டுபிடிக்கப்பட்ட போதிசத்வா தேவி சிலை; அரசி கென் தெடிசுக்காக செதுக்கப்பட்டது; (இந்தோனேசிய தேசிய அருங்காட்சியகத்தின் தொகுப்பிலிருந்து)
சிங்காசாரி அரசி
அரசி1222 – 1227
துணைவர்
குழந்தைகளின்
பெயர்கள்
  • அனுசபதி
  • மகிசா ஓங் ஆதிலெங்கு
  • அபாஞ்சி சுபராங்
  • அக்கினி பாயன்
  • தேவி உரும்பு
பெயர்கள்
கென் தெடிஸ்
மரபுஇராஜசா அரசமரபு
தந்தைமாபூ பூர்வா
மதம்மகாயான பௌத்தம்

சிங்காசாரி பேரரசில் இருந்து மஜபாகித் பேரரசு வரை ஜாவாவை ஆட்சி செய்த அரசர்களின் மூதாதையராகவும்; இராஜசா அரசமரபின் சிறந்த அன்னையாகவும் கருதப்படுகிறார். உள்ளூர் ஜாவானிய பாரம்பரியம், இவரை நிறைவான அழகின் நேர்த்தியான உருவகமாகப் போற்றிப் புகழ்கிறது.[2]

வாழ்க்கை

இவரின் வாழ்க்கையின் பெரும்பாலான பதிவுகள் பாராரத்தோன் தொகுப்பில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. இவர் ஒரு பௌத்த துறவியான மாபூ பூர்வா என்பவரின் மகள் ஆவார்.[3]

ஜாவானிய பாரம்பரியத்தின் படி, அந்தக் காலக்கட்டத்தில், கென் தெடிசின் அசாதாரண அழகு நாடு முழுவதும் பிரபலமானது;[4] மற்றும் துமபெல் பிராந்தியத்தின் (தற்போது கிழக்கு ஜாவாவின் சிங்காசாரி மாவட்டம்) ஆட்சியாளரான துங்குல் அமெதுங்கையும் ஈர்த்தது. பின்னர் துங்குல் அமெதுங், கென் தெடிசை தன் மனைவியாக ஈர்த்துக் கொண்டார்.[5][6]

உள்ளூர் புராணக் கதைகளின்படி, கென் தெடிசின் தந்தை தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது, கென் தெடிஸ் கடத்தப்பட்டு, துங்குல் அமெதுங்கின் மனைவியாகும்படி கட்டாயப் படுத்தப்பட்டார். கென் தெடிசின் அழகால் துங்குல் அமெதுங் கொல்லப்படுவார் என்று கூறி தெடிசின் தந்தை சபித்தார். துங்குல் அமெதுங், கென் அரோக்கால் கொல்லப்பட்ட பின்னர், கென் தெடிஸ், கென் அரோக்கின் மனைவியான போது அந்தச் சாபம் பலித்தாகச் சொல்லப்படுகிறது.[5][3]

கென் அரோக்

படிமம்:Prajnaparamita Java.jpg
அரசி கென் தெடிசுக்காக செதுக்கப்பட்ட சிலையின் ஒரு பகுதி

தற்செயலாக கென் அரோக் ஒருநாள், கென் தெடிஸை பார்க்க நேர்ந்தது. அவளின் அழகில் மயங்கிய கென் அரோக், கென் தெடிஸை அடைய முயற்சி செய்தார்.[7] இதற்கிடையில், கென் தெடிஸின் கணவர் துங்குல் அமெதுங் கொலை செய்யப்பட்டார். அதற்கு கென் அரோக்தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் கென் அரோக், தன்னை துமபல் பிராந்தியத்தின் புதிய ஆட்சியாளராக அறிவித்துக் கொண்டார்; [8] மற்றும் கென் தெடிஸையும் மணம் செய்து கொண்டார்.

கென் அரோக்கின் இலட்சியப் பயணம் துமபல் பிராந்தியத்தின் தலைவரான பின்னரும் முற்றுப் பெறவில்லை. 1222-ஆம் ஆண்டில், காண்டர் போரில் (Battle of Genter), அவர் கேடிரி மன்னர் கீர்த்தஜெயனை (Kertajaya) தோற்கடித்து, சிங்காசாரி என்ற புதிய இராச்சியத்தை நிறுவினார். கேடிரி அரசு, சிங்காசாரி இராச்சியத்தின் கீழ் ஓர் அடிமை மாநிலமாக மாறியது. கென் தெடிஸ், கென் அரோக்கின் மனைவியான பின்னர்,[9] சிங்காசாரியின் முதல் அரசியானார்.[10][11]

கிழக்கு ஜாவாவில் 1818-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட போதிசத்வா தேவி சிலை; கென் தெடிசுக்கு செதுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்தச் சிலை அவருடைய சாயலில் செய்யப்பட்டு, அவருடைய கல்லறையில் தெய்வீகச் சிலையாக வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.

தற்போது அந்தச் சிலை இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்தின் பாதுகாப்பில் உள்ளது.

மேலும் காண்க

காட்சியகம்

கென் தெடிஸ் காட்சிப் படங்கள்:

மேற்கோள்கள்

  1. "Surviving Legend, Surviving 'Unity in Diversity' a Reading of Ken Arok and Ken Dedes Narratives'" (PDF). Novita Dewi: National University of Singapore. Retrieved 25 February 2025.
  2. "Ken Arok Ken Dedes Pdf Downloadl". sites.google.com. Retrieved 25 February 2025.
  3. 3.0 3.1 Pitono, R Drs. (1965) Pararaton, Penerbit Bhratara, Jakarta.
  4. "The myth of Ken Dedes in the mother cult of East Javanese society". ResearchGate Logo. Retrieved 25 February 2025.
  5. 5.0 5.1 "It was said that Tunggul Ametung married Ken Dedes by force through kidnapping. It was also said that Mpu Purwa, Ken Dedes' father cast a curse that Tunggul Ametung would be killed because of her beauty". Indonesian Folk Tales Wiki (in ஆங்கிலம்). Retrieved 25 February 2025.
  6. "Dedes: A Tale of Love, Betrayal, and Karma". adrianasinggih. Retrieved 25 February 2025.
  7. "Dedes: A Tale of Love, Betrayal, and Karma". adrianasinggih. Retrieved 25 February 2025.
  8. "The #1 AI Storytelling Platform". Story.com (in ஆங்கிலம்). Retrieved 25 February 2025.
  9. Bullough, Nigel (1995). Mujiyono PH (ed.). Historic East Java: Remains in Stone. Jakarta: ADLine Communications. p. 29.
  10. "Surviving Legend, Surviving 'Unity in Diversity' a Reading of Ken Arok and Ken Dedes Narratives'" (PDF). Novita Dewi: National University of Singapore. Retrieved 25 February 2025.
  11. "Ken Arok Ken Dedes Pdf Downloadl". sites.google.com. Retrieved 25 February 2025.

சான்றுகள்

  • Poesponegoro & Notosusanto (ed.). 1990. Sejarah Nasional Indonesia Jilid II. Jakarta: Balai Pustaka
  • R.M. Mangkudimedja. 1979. Serat Pararaton Jilid 2. Jakarta: Departemen Pendidikan dan Kebudayaan, Proyek Penerbitan Buku Sastra Indonesia dan Daerah
  • Slamet Muljana. 1979. Nagarakretagama dan Tafsir Sejarahnya. Jakarta: Bhratara

நூல்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கென்_தெடிஸ்&oldid=337848" இலிருந்து மீள்விக்கப்பட்டது