சிவஹர்
சிவஹர் (Sheohar), வட இந்தியாவின் பீகார் மாநிலத்தின் மிதிலை பிரதேசத்தில் உள்ள சிவஹர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் பேரூராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான பட்னாவிற்கு வடக்கே 149.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சிவஹர் | |
|---|---|
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சிவஹர் நகரததின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 26°31′N 85°18′E / 26.52°N 85.3°E | |
| நாடு | |
| மாநிலம் | பீகார் |
| பிரதேசம் | மிதிலை பிரதேசம் |
| மாவட்டம் | சிவஹர் மாவட்டம் |
| பெயர்ச்சூட்டு | சிவ பெருமான் |
| அரசு | |
| • வகை | பேரூராட்சி |
| • நிர்வாகம் | சிவஹர் பேரூராட்சி |
| ஏற்றம் | 53 m (174 ft) |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • மொத்தம் | 28,116 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | இந்தி மொழி |
| • கூடுதல் அலுவல் மொழி | மைதிலி மொழி |
| • வட்டார மொழிகள் | பஜ்ஜிகா, மைதிலி |
| • பிற மொழிகள் | போச்புரி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 843329. |
| மக்களவை தொகுதி | சிவஹர் மக்களவைத் தொகுதி |
| சட்டமன்ற தொகுதி | சிவஹர் சட்டமன்ற தொகுதி |
| இணையதளம் | www |
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15 வார்டுகளும், 5,858 குடியிருப்புகளும் கொண்ட சிவஹர் நகரத்தின் மக்கள் தொகை 28,116 ஆகும். அதில் 14,881 ஆண்கள் மற்றும் 13,235 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 61.96 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 13.29 % மற்றும் 0.08 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 85.81%, இசுலாமியர் 13.43%, சமணர்கள் , கிறித்தவர்கள் 0.21% மற்றும் பிற சமயத்தினர் 0.54 % வீதம் உள்ளனர்.[2]இவ்வூரில் இந்தி மற்றும் உருது மொழிகளும் மைதிலி மொழி மற்றும் போச்புரி மொழிகள் வட்டார மொழிகளாகப் பேசப்படுகிறது.
அருகமைந்த இரயில் நிலையம்
சிவஹரில் இரயில் நிலையம் இல்லை. இதனருகில் உள்ள மேசி இரயில் நிலையம், சிவஹருக்கு தென்கிழக்கில் 38 கிலோ மீட்டர் தொல்லைவில் உள்ளது. [3]
மேற்கோள்கள்
- ↑ "Census of India Search details". censusindia.gov.in. Retrieved 10 May 2015.
- ↑ Sheohar Town Population Census 2011
- ↑ Mehsi railway station