செந்தொடை

imported>Nan பயனரால் செய்யப்பட்ட 17:51, 7 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை போன்ற எவ்வகைத் தொடையும் இல்லாமல், அவற்றில் உள்ள சொற்களின் இயல்பான தன்மையினால் அழகுற அமைவது செந்தொடை எனப்படுகின்றது.

அந்தாதித் தொடை, இரட்டைத் தொடை, செந்தொடை ஆகிய இம்மூவகைத் தொடைகளின் இலக்கணம் கூறும் நூற்பா கீழ்வருமாறு:

"அந்த முதலாத் தொடுப்பதந் தாதி; அடிமுழுதும்
வந்த மொழியே வருவ திரட்டை; வரன்முறையான்
முந்திய மோனை முதலா முழுதும்ஒவ் வாதுவிட்டால்
செந்தொடை நாமம் பெறும்நறு மென்குழல் தேமொழியே"

(யாப்பருங்கலக் காரிகை, 17)

"https://tamilar.wiki/w/index.php?title=செந்தொடை&oldid=368847" இலிருந்து மீள்விக்கப்பட்டது