செனோடைம்-(Gd)

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 02:57, 4 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

செனோடைம்-(Gd) (Xenotime-(Gd)) என்பது Gd(PO4) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். செனோடைம் என்ற அரிய கனிமத்தின் கடோலினியம் தனிமம் இடம்பெற்றுள்ள கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. அறியப்பட்ட சில காடோலினியம் ஆதிக்கம் செலுத்தும் அருமண் தாதுக்களில் செனோடைம்-(Gd) கனிமமும் ஒன்றாகும்.

செனோடைம்-(Gd)
Xenotime-(Gd)
பொதுவானாவை
வகைசெனோடைம் குழு
வேதி வாய்பாடுGd(PO4)
இனங்காணல்
படிக அமைப்புநாற்கோணம்
ஒப்படர்த்தி5.26 கி/செ.மீ3 (கணக்கிடப்பட்டது)
மேற்கோள்கள்[1]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் செனோடைம்-(Gd) கனிமத்தை [1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

கண்டுபிடிப்பு

2023 ஆம் ஆண்டில் சுலோவாக் தாது மலைகளில் செனோடைம்-(Gd) கனிமம் கண்டறியப்பட்டது. நடுத்தர அருமண் தனிமங்கள் என வகைப்படுத்தப்பட்ட தனிமங்களால் செறிவூட்டப்பட்ட பிற அருமண் தாதுக்களுடன் சேர்ந்து இது காணப்பட்டதாக பதிவுகள் பதிவாகியுள்ளன.[2] செனோடைம்-(Gd) என்ற கனிம இனத்தை 2023 ஆம் ஆண்டில் பன்னாட்டு கனிமவியல் சங்கம் அங்கீகரிக்கத்துள்ளது.[3] சுலோவாகியாவிலுள்ள பிரகோவ்சு கிராமத்திற்கு அருகிலுள்ள இயிம்னா வோடா குவார்ட்சு விளிம்புகளில் எடுக்கப்பட்ட கடோலினியம் நிறைந்த செனோடைம்-(Y) மாதிரியில் காணப்படும் படிகங்களின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டில் கனிமத்தின் விளக்கம் வெளியிடப்பட்டது.[4] இட்ரியம் தவிர, ஆய்வு செய்யப்பட்ட வகைப் பொருள் டிசிப்ரோசியம், சமாரியம் மற்றும் டெர்பியம் போன்ற அருமண் தனிமங்களும் இதில் கலந்திருக்கும்.[4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Page Xenotime-(Gd): Mineral information, data and localities on "mindat.org". Hudson Institute of Mineralogy. Retrieved 2024-12-27.
  2. "Gadolinium-dominant monazite and xenotime: Selective hydrothermal enrichment of middle REE during low-temperature alteration of uraninite, brannerite, and fluorapatite (the Zimná Voda REE-U-Au quartz vein, Western Carpathians, Slovakia)". American Mineralogist 108 (4): 754-768. 2023-04-03. doi:10.2138/am-2022-8418. https://pubs.geoscienceworld.org/msa/ammin/article-abstract/108/4/754/621451/Gadolinium-dominant-monazite-and-xenotime. பார்த்த நாள்: 2025-01-01. 
  3. "New Mineral Names". American Mineralogist 109 (4): 799-802. 2024-03-27. doi:10.2138/am-2024-NMN10949. Bibcode: 2024MinM...88..613O. https://www.degruyter.com/document/doi/10.2138/am-2024-NMN10949/html. பார்த்த நாள்: 2024-12-27. 
  4. 4.0 4.1 "Xenotime-(Gd), a new Gd-dominant mineral of the xenotime group from the Zimná Voda REE–U–Au quartz vein, Prakovce, Western Carpathians, Slovakia". Mineralogical Magazine 88 (5): 613–622. 2024-11-14. doi:10.1180/mgm.2024.62. Bibcode: 2024MinM...88..613O. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/xenotimegd-a-new-gddominant-mineral-of-the-xenotime-group-from-the-zimna-voda-reeuau-quartz-vein-prakovce-western-carpathians-slovakia/BAE272E641CD070077D393E07047A620. பார்த்த நாள்: 2024-12-27. 
"https://tamilar.wiki/w/index.php?title=செனோடைம்-(Gd)&oldid=368946" இலிருந்து மீள்விக்கப்பட்டது