சேதி ஆறு

imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 03:49, 21 பெப்பிரவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:ஆசிய ஆறுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சேதி ஆறு (Seti River) என்பது மேற்கு நேபாள கர்னாலி ஆற்றின் முக்கியமான துணை ஆறாகும்.[1]

சேதி ஆறு
2017-ல் சேதி ஆறு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 • அமைவுஅபி மலையின் பள்ளத்தாகு மற்றும் நம்பா சிகரம்
முகத்துவாரம் 
 • அமைவு
காக்ரா ஆறு
வடிநில சிறப்புக்கூறுகள்
நதி அமைப்புகாக்ரா ஆறு

ஆற்றோட்டம்

இமயமலையின் தெற்கு சரிவுகளில் உள்ள அபி மற்றும் நம்பாவின் இரட்டை சிகரங்களைச் சுற்றியுள்ள பனி வெளி மற்றும் பனிப்பாறைகளில் சேதி ஆறு உருவாகிறது. இப்பகுதி நேபாளம், இந்தியா (குமாவோன், உத்தராகண்டம்) மற்றும் சீனா (திபெத்து) ஆகிய நாடுகளின் எல்லைகளின் முச்சந்திக்கு அருகில் உள்ளது. இந்த ஆறு முதலில் தென்கிழக்கு திசையில் பாய்ந்து, பின்னர் திரும்பி தென்மேற்கு திசையில் பாய்கிறது. சேதி ஆறு, இறுதியாகத் தென்கிழக்கு திசையில் திரும்பி கர்னாலி அல்லது காக்ரா ஆற்றுடன் இணைகிறது. இது மகாபாரத மலைத்தொடரின் குறுக்கே கண்கவர் பள்ளத்தாக்கை ஏற்படுத்தியுள்ளது. இங்குக் குறுகிய இடைவெளியில் குகைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் காணப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Negi, Sharad Singh (1991). Himalayan rivers, lakes and glaciers. ISBN 9788185182612. Retrieved 2010-05-18. {{cite book}}: |work= ignored (help)

28°57′58″N 81°06′15″E / 28.9661°N 81.1043°E / 28.9661; 81.1043

"https://tamilar.wiki/w/index.php?title=சேதி_ஆறு&oldid=372120" இலிருந்து மீள்விக்கப்பட்டது