சௌவாரி
சௌவாரி Chowari | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 32°26′00″N 76°01′00″E / 32.433331°N 76.016673°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
| மாவட்டம் | சம்பா |
| ஏற்றம் | 1,202 m (3,944 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 3,770 |
| மொழிகள் | |
| • அலுவல் | இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீடு | 176302 |
| இடக் குறியீடு | +91-18992-xxxxx |
| வாகனப் பதிவு | எச்.பி-57 |
| இணையதளம் | hpchamba |
சௌவாரி (Chowari) என்பது இந்தியாவின் இமாச்சலப்பிரதேசத்திலுள்ள சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமும் பேரூராட்சியுமாகும்.
புவியியல்
சௌவாரி 32°26′வடக்கு 76°01′கிழக்கு என்ற ஆள் கூறுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1202 மீட்டர் (3944 அடி) உயரத்தில் இக்கிராமம் உள்ளது.[1]
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சௌவாரி நகரத்தின் மக்கள் தொகை 3770 ஆக இருந்தது. இம்மக்கள் தொகையில் ஆண்கள் 1865 பேரும் பெண்கள் 1905 பேறும் இருந்தனர். சௌவாரி நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 89.28% ஆகும். இது மாநிலத்தின் சராசரியான 82.80 % என்பதை விட அதிகம் ஆகும். இக்கிராமத்தின் ஆண்களின் கல்வியறிவு 94.17% மற்றும் பெண்களின் கல்வியறிவு 84.45% ஆகும். சௌவாரி நகரத்தின் மக்கள் தொகையில் 11% பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர்.[2]
மேற்கோள்கள்
- ↑ Falling Chuari Khas, India Page. Rain Genomics, Inc.
- ↑ "Chuari Khas Nagar Panchayat City Population Census 2011-2025 | Himachal Pradesh". www.census2011.co.in. Retrieved 2025-09-17.