டியூட்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Knowdom 2.0 பயனரால் செய்யப்பட்ட 01:13, 14 திசம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
டியூட்
திரைப்படப் பதாகை
இயக்கம்கீர்த்தீஸ்வரன்
தயாரிப்புநவீன்
ரவி சங்கர்
கதைகீர்த்தீஸ்வரன்
இசைசாய் அபயங்கர்
நடிப்பு
ஒளிப்பதிவுநிகேத் பொம்மி
படத்தொகுப்புபரத் விக்ரம்
கலையகம்மைத்திரி மூவி மேக்கர்சு
வெளியீடு17 அக்டோபர் 2025 (2025-10-17)
ஓட்டம்139 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு25–30 கோடி[2]

டியூட் (Dude) என்பது 2025-இல் வெளிவந்த அதிரடிக் காதல் திரைப்படம் ஆகும். மைத்திரி மூவி மேக்கர்சு தயாரித்துள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். இந்தப்படம் தீபாவளியை ஒட்டி 2025 அக்டோபர் 17 அன்று வெளியானது.

நடிகர்கள்

இசை

இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.[3]

விமர்சனங்கள்

திரைப்படத்திற்கு வந்த விமர்சனத்தில் பல செயற்கையான காட்சிகள் இருந்தாலும் பொழுதுபோக்கான படமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். கல்கி வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "சற்று பிசகினாலும் விரசமாக மாறக்கூடிய கதையை நேர்த்தியாக தந்ததற்காகப் பாராட்டலாம். டியூட்- தீபாவளி சரவெடி" என்று விமர்சனம் எழுதினர்.[4] இந்து தமிழ் திசை வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "ஹீரோயினைத் திட்டினால் கைதட்டல் பெறலாம் என்று யோசித்து சில வசனங்கள் வைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. அதேபோல படத்தின் க்ளைமாக்ஸும் அதீத சினிமாத்தனம் வந்து ஒட்டிக் கொண்டதைப் போன்ற உணர்வு. சற்றே மாற்றி யோசித்திருக்கலாம். இந்த வெகு சில குறைகளைத் தாண்டி தீபாவளி விடுமுறையில் கலகலப்பான, கொண்டாட்ட மனநிலையுடன் இரண்டரை மணி நேரத்தை செலவிட விரும்புவோர் தாராளமாகச் சென்று பார்க்கக் கூடிய படமாக வந்துள்ளது இந்த ‘டியூட்’" என்று எழுதினர்.[5] வீரகேசரி வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "இதுபோன்ற காதல் கதைகளில் சுவராசியமான முடிச்சுகளும்.. அதனை அதைவிட சுவாரசியமாக அவிழ்க்கும் அழுத்தமான காட்சிகளும் இடம்பெறுவது தான் பலம். இதில் முடிச்சுகள் பலம். ஆனால் அதற்கான அவிழ்ப்புகள் தான் பலவீனம். டியூட் - ரொமான்டிக் சுவையற்ற சொக்லெட்" என்று எழுதி மதிப்பீடுகள் தந்தனர்.[6] ஆனந்த விகடன் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "கலர்புல் முக்கோணக் காதல் கலாட்டாவாக இரசிக்க வைத்ததோடு, சாதிவெறியின் கோர முகத்தைத் தோலுரித்து, நம்பிக்கையூட்டுகிறார் 'ட்யூட்'" என்று எழுதினர்.[7]

மேற்கோள்கள்

  1. "Dude". Central Board of Film Certification. Retrieved 15 October 2025.
  2. "'Dude' box office collection pre-release update: Pradeep Ranganathan-starrer recovers budget with massive OTT deal". The Week (in ஆங்கிலம்). October 16, 2025. Retrieved 2025-10-16.
  3. "பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிக்கவுள்ள படத்தின் அப்டேட்". தினத்தந்தி. 25 March 2025. Archived from the original on 2 June 2025. Retrieved 25 March 2025.
  4. ராகவ்குமார் (2025-10-18). "விமர்சனம்: டியூட் - தீபாவளி சரவெடி!". Kalki Online. Retrieved 2025-10-18.
  5. டெக்ஸ்டர் (2025-10-17). "'டியூட்' விமர்சனம்: ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தாரா பிரதீப் ரங்கநாதன்?". இந்து தமிழ் திசை. Retrieved 2025-10-18.
  6. "டியூட் - திரைப்பட விமர்சனம்". Virakesari.lk (in ஆங்கிலம்). Retrieved 2025-10-18.
  7. டீம், விகடன் (2025-10-17). "Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்!". vikatan.com. Retrieved 2025-10-18.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=டியூட்&oldid=384401" இலிருந்து மீள்விக்கப்பட்டது