தழும்பன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>JayarathinaAWB BOT பயனரால் செய்யப்பட்ட 15:18, 1 செப்டெம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

தழும்பன் ஊணூர் மன்னன். அவன் உடம்பில் விழுப்புண் தழும்புகள் மிகுதி. யாழிசைப் பாணர்களின் உறவினனாகவும், தலைவனாகவும் விளங்கியவன்.[1]

இவன் ‘பிடிமிதி வழுதுணைத் தழும்பன்’ எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளான். பெண்யானை ஒன்று இவனை மிதித்ததால் மூட்டு வழுவி வழு உண்டாகிப் பின் நலம் பெற்ற தழும்பும் அவன் உடம்பில் இருந்தது.[2]

இவன் வாய்மொழித் தழும்பன் எனவும் போற்றப்படுகிறான். இதனால் இவன் சொன்ன சொல் தவறாதவன் எனத் தெரிகிறது.[3]

அடிக்குறிப்பு

  1. பரணர் - நற்றிணை 300-10
  2. நக்கீரர் - அகம் 227-7
  3. பரணர் - புறம் 348-5
"https://tamilar.wiki/w/index.php?title=தழும்பன்&oldid=391837" இலிருந்து மீள்விக்கப்பட்டது