தாடிபாகா

imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 17:30, 7 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தாடிபாகா (Tatipaka), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் கோணசீமா மாவட்டத்தின் ராஜோலு மண்டலத்தில் அமைந்த கிராமம் ஆகும். 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 8,630 ஆகும்.[1]

தாடிபாகா

கிராமம்

Dynamic map
தாடிபாகா is located in ஆந்திரப் பிரதேசம்
தாடிபாகா
தாடிபாகா
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தாடிபாக கிராமத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°17′01″N 81°30′09″E / 16.2836°N 81.5024°E / 16.2836; 81.5024
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கோணசீமா மாவட்டம்
ஏற்றம்
1 m (3 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்8,630
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
533249
தொலைபேசி குறியீடு08862
வாகனப் பதிவுAP

பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

கோதாவரி ஆற்றின் வடிநிலத்தில், வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்த இக்கிராமத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தினர் பூமிக்கடியில் பாறை எண்ணெய்யை கண்டுபிடித்துள்ளனர்.

பாறை எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்ய இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு ஏப்ரல் 2011ல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ரூபாய் 16 கோடி செலவில் சிறிய அளவில் பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைத்து, ஆண்டிற்கு 10,000 டன் கனிம டர்பன்டைன் எண்ணெயை (mineral turpentine oil) உற்பத்தி செய்து வருகிறது.[2]

2013ஆம் ஆண்டில் தாடிபாக ஆலையை ரூபாய் 20 கோடி செலவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தாடிபாகா&oldid=392775" இலிருந்து மீள்விக்கப்பட்டது