தானரூபி
தானரூபி கருநாடக இசையின் 6 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 6 வது இராகத்திற்கு தனுகீர்த்தி என்ற பெயர்.[1][2]
இலக்கணம்
| ஆரோகணம்: | ஸ ரி1 க1 ம1 ப த3 நி3 ஸ் |
| அவரோகணம்: | ஸ் நி3 த3 ப ம1 க1 ரி1 ஸ |
சிறப்பு அம்சங்கள்
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் ரகுப்பிரியா (42) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
- ஜன்ய இராகங்கள் கிடையாது.
உருப்படிகள்
| வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
|---|---|---|---|
| கிருதி | சிதம்பர நடராஜமூர்த்திம் | முத்துசுவாமி தீட்சிதர் | மிச்ர ஏக |
| கிருதி | வா வேலவா வா | கோடீஸ்வர ஐயர் | ஜம்ப |
| கிருதி | சிறீ ராமா ஸதா பஜேஹம் | மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா | ஆதி |