தால்செர்

imported>Sivakosaran பயனரால் செய்யப்பட்ட 11:52, 29 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (Added image and caption)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தால்செர் (Talcher), கிழக்கு இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் உள்ள அனுகோள் மாவட்டத்தில் உள்ள தால்செர் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் தால்செர் சமஸ்தானத்தின்[2] தலைநகரமாக தால்செர் விளங்கியது. இது மாநிலத் தலைநகரான புவனேஸ்வருக்கு வடமேற்கே 139 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

தால்செர்
தால்செர் is located in ஒடிசா
தால்செர்
தால்செர்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் தால்செர் நகரத்தின் அமைவிடம்
தால்செர் is located in இந்தியா
தால்செர்
தால்செர்
தால்செர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 20°57′N 85°14′E / 20.95°N 85.23°E / 20.95; 85.23
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்அனுகோள்
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்40,841
இனம்ତାଳଚେରିଆ
மொழிகள்
 • அலுவல் மொழிகள்ஒடியா மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
759100
தொலைபேசி குறியீடு06760
வாகனப் பதிவுOD-35
அருகமைந்த நகரங்கள்டேங்கானாள், கட்டக், புவனேஸ்வர்
எழுத்தறிவு75%
படிமம்:Jagannath Temple, Talcher.jpg
தால்செர் ஜகன்னாதர் கோவில்

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 21 வார்டுகளும், 9,114 வீடுகளும் கொண்ட தால்செர் நகரத்தின் மக்கள் தொகை 40,841 ஆகும். அதில் ஆண்கள் 21,774 மற்றும் பெண்கள் 19,067 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 876 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,658 மற்றும் 1,703 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 95.57%, இசுலாமியர் 3.52%, சீக்கியர்கள் 0.69%, கிறித்தவர்கள் 0.15% மற்றும் பிறர் 0.07% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தால்செர்&oldid=394122" இலிருந்து மீள்விக்கப்பட்டது