திரிசூலி

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 13:10, 24 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

திரிசூலி (Tirsuli) வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டத்தில் உள்ள பிதௌரகட் மாவட்டத்தில் அமைந்த இமயமலையில் உள்ள கொடுமுடிகளில் ஒன்றாகும். இது 7,074 மீட்டர் (23,209 அடி) உயரம் கொண்டது. திரிசூலி மேற்கு, ஹர்தியோல், துனாகிரி, சாங்கபாங் மற்றும் கலாங்கா போன்ற பஞ்சசூலி மலைத்தொடர்களில் ஒன்றாகும். திரிசூலி மலைத்தொடரில் உள்ள ஜோகர் சமவெளியில் கோரி கங்கா நதி பாய்கிறது.

திரிசூலி
படிமம்:Der Szurdse Kund aus Süden mit der Moräne des Milam-Gletschers.jpg
ஹர்தியோல் (இடது) மற்றும் திரிசூலி I, புகைப்படம், ஆண்டு, 1890
உயர்ந்த புள்ளி
உயரம்7,074 m (23,209 அடி)[1]
புடைப்பு624 m (2,047 அடி)[2]
ஆள்கூறு30°34′48″N 80°01′12″E / 30.58000°N 80.02000°E / 30.58000; 80.02000[3]
பெயரிடுதல்
மொழிபெயர்ப்புதிரிசூலம்
புவியியல்
திரிசூலி is located in இந்தியா
திரிசூலி
திரிசூலி
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் அமைவிடம்
அமைவிடம்பிதௌரகட் மாவட்டம், உத்தராகண்ட், இந்தியா
மூலத் தொடர்இமயமலை, குமாவுன் கோட்டம்
ஏறுதல்
முதல் மலையேற்றம்1966, என். மாலிக், & எஸ். சக்ரவர்த்தி, தாஷி & தோர்ஜி செர்ப்பா (உதவியாளர்கள்)
எளிய வழிEast Face of Southeast Ridge to Southeast Ridge: snow/ice climb

திரிசூலி கொடுமுடியில் 1966 முதன்முதலாக ஏறியோர் என். மாலிக், & எஸ். சக்ரவர்த்தி ஆவர். அவர்களுக்கு உதவியவர்கள் தாஷி & தோர்ஜி செர்ப்பாக்கள் ஆவர்.[4]

படிமம்:Tirsuli group.jpg
மலையேற்றக் குழுவினர்

மேற்கோள்கள்

  1. Garhwal-Himalaya Ost (map, 1:150,000), Swiss Foundation of Alpine Research.
  2. This is an approximate figure. See Garhwal-Himalaya Ost (map, 1:150,000), Swiss Foundation for Alpine Research.
  3. The Alpine Club's Himalayan Index. The Indian Mountaineering Foundation quarterly Newsletter No.16 gives a slightly different figure.
  4. Himalayan Journal 27, p. 67.
"https://tamilar.wiki/w/index.php?title=திரிசூலி&oldid=396694" இலிருந்து மீள்விக்கப்பட்டது