திருச்சி - 4

imported>Anbumunusamy பயனரால் செய்யப்பட்ட 15:27, 22 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

திருச்சி - 4 (TRY 4), சுட்டுப்பெயர்: TR 05031)[1] எனப்படும் இந்த நெல் வகை, ஆடுதுறை - 39 மற்றும் கோவை - 45 ஆகிய ஊங்கணோர் மரபு வழி நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் புதிய நெல் வகையாகும்.[2]

திருச்சி - 4
TRY 4
வேளாண் பெயர்
TR 05031
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ADT -39 X CO 45
வகை
புதிய நெல் வகை
காலம்
127 நாட்கள்
மகசூல்
5,730 கிலோ எக்டேர்
வெளியீடு
2021
வெளியீட்டு நிறுவனம்
TNAU, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

காலம்

தமிழ்நாட்டின் பின் சம்பா மற்றும் தாளடி ஆகிய நெற்பருவக் காலத்தில் பயிரிட ஏற்றதாக கூறப்படும் இந்நெல் இரகம், நடுத்தரக் காலத்திற்கு முன்பாக 127 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய நெல் இரகமாகும்.[2]

விளைச்சல்

தமிழ்நாட்டில் 181 இடங்களில் பன்னிரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட சோதனையில், உப்பு பாதிக்கப்பட்ட மண்ணில் இந்த வளர்ப்பு அதிக மகசூல் தரக்கூடியது என பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு எக்டேருக்கு சுமார் 5,730 கிலோ கூல மகசூல் தரக்கூடியது எனவும், இது TKM 13 இரகத்தை விட 22.00 விழுக்காடாகவும், மற்றும் ADT 39 இரகத்தை விட 16.50 விழுக்காடாகவும் தானிய மகசூல் அதிகரித்தது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த நெல் இரகத்தை, விதை உற்பத்திச் செய்ய இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.[3]

வெளியீடு

இந்த நெல் இரகத்தை, TNAU கீழ் இயங்கிவரும், திருச்சி நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள "அன்பில் பி. தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்," (Anbil Dharmalingam Agricultural College and Research Institute (ADACRI) 2021 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2][4]

முக்கிய அம்சங்கள்

பாசுமதி அல்லாத வகையான இது, நீர்ப்பாசன நிலைக்கு மிகவும் ஏற்றது. நடுத்தர மற்றும் மெல்லிய வெள்ளை அரிசியை கொண்டுள்ள இதன் நெற்பயிர், இலை சுருட்டு, தண்டு துளைப்பான் மற்றும் பித்தப்பை பூச்சி, குலைநோய் மற்றும் பழுப்பு நிற புள்ளி நோய்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. மேலும் சோடியம் மற்றும் உப்புத்தன்மையை பொறுத்துக்கொள்ளும் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.[1]

வெளி இணைப்பு

சான்றுகள்

  1. 1.0 1.1 "Indian Rice Varietal Information - Rice TRY 4 (TR 05031)". rice-garud.icar-web.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-11-21.
  2. 2.0 2.1 2.2 "Technologies Developed - Sl.No 1". tnau.ac.in (ஆங்கிலம்) - © 2025. Retrieved 2025-11-21.
  3. TRY 4: A high yielding, mid early, sodicity tolerant rice variety suited to Tamil Nadu - (ஆங்கிலம்) 25 Sep 2022
  4. ‘TRY 4 rice variety suitable for sodic soil’ - The Hindu (ஆங்கிலம்) - February 18, 2021
"https://tamilar.wiki/w/index.php?title=திருச்சி_-_4&oldid=397402" இலிருந்து மீள்விக்கப்பட்டது