தே. லூர்து

imported>Almighty34 பயனரால் செய்யப்பட்ட 09:53, 20 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தே. லூர்து (D. Lourdu சூன் 26 1937 - 5 ஏப்பிரல் 2008) தமிழ்நாட்டைச்சார்ந்த நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர், பேராசிரியர்.[1] இவர் பர்மாவில் ஐராவதி ஆற்றங்கரையில் உள்ள தாந்தபீன் என்ற ஊரில் 1937 சூன் 26 ஆம் நாள் அன்று பிறந்தவர். தமிழரின் நாட்டார் வழக்காற்றில் கல்விப்புலத்திற்கான அடிப்படை ஆய்வுகளை மேற்கொண்டவர்.[2]

தே. லூர்து
பிறப்பு(1937-06-26)26 சூன் 1937
மியான்மர், மியான்மர் தாந்தபீன்
இறப்பு(2008-04-05)5 ஏப்ரல் 2008
திருநெல்வேலி, தமிழ்நாடு
தேசியம்இந்தியா
கல்விமுனைவர்ப்பட்டம்
பணிஆசிரியர், பழமொழியியலாளர், ஆய்வறிஞர்
பணியகம்தூய சவேரியார் கல்லூரி
அறியப்படுவதுதமிழறிஞர், நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்
சமயம்கிறித்தவம்
பிள்ளைகள்பாரிவேள்

பணி

தே. லூர்து பாளையங்கோட்டையிலுள்ள தூய சவேரியர் கல்லூரியில் தமிழ்த்துறையின் பேராசிரியர் மற்றும் தலைவராகப் பணியாற்றியதோடு இதேக்ககல்லூரியில் 1987 இல் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தினைத் தொடங்கி அதன் இயக்குநராகவும் செயல்பட்டுள்ளார்.[3] நா. வானமாமலையைப் பின்பற்றி நாட்டுப்புறவியல் என்னும் சொல்லுக்கு மாற்றாக நாட்டார் வழக்காற்றியல் என்னும் கலைச்சொல்லினை நிலைப்படுத்தினார்.[4] தமிழில் சாலை இளந்திரையனுக்கும் பெருமாளுக்கும் பிறகு தமிழ்ப்பழமொழிகள் குறித்த முனைவர்ப்பட்ட ஆய்வினை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு பழமொழிகளின் செயற்பாட்டியல் ஆய்வினை முன்னெடுத்துள்ளார்.[5]

விருதுகள்

நாட்டர் வழக்காறியல் கல்விப்புலத்தில் இவரின் முன்னடுப்புகளையும் பங்களிப்புகளையும் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு குறள்பீட விருதை 2000இல் வழங்கியுள்ளது.[6]

எழுதிய நூல்கள்

தே. லூர்து பின்வரும் நூல்களை எழுதியுள்ளார்.

  • தமிழ்ப்பழமொழிகள் ஓர் ஆய்வு (முனைவர் பட்ட ஆய்வேடு (1980)[7]
  • நாட்டார் வழக்காற்றியல் ஓர் அறிமுகம் (1976).[8]
  • நாட்டார் வழக்காற்றியல் கள ஆய்வு (1986).[9]
  • தமிழ்ப்பழமொழிகள்:அமைப்பு, பொருண்மை, செயல்பாடு (2007), [10], [11]
  • சூழலியம் பழமொழிகளை முன்வைத்து (2008).[12]
  • நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள் (2008).[13]

சான்றுகள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-11-23. Retrieved 2018-01-18.
  2. லூர்து, தே, 2008, சூழலியம் பழமொழிகளை முன்வைத்து, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்: பாளையங்கோட்டை
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-08-22. Retrieved 2018-01-18.
  4. http://www.tamilvu.org/courses/degree/a061/a0611/html/a0611111.htm
  5. http://www.jeyamohan.in/2240#.WmDp5jfhXIU
  6. லூர்து, தே, 2008, சூழலியம் பழமொழிகளை முன்வைத்து, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்: பாளையங்கோட்டை
  7. நாட்டார் வழக்காற்றியல்:சில அடிப்படைகள்
  8. லூர்து, தே, 1976, நாட்டார் வழக்காற்றியல் ஓர் அறிமுகம், பாரிவேல் பதிப்பகம்: பாளையங்கோட்டை
  9. லூர்து, தே, 1986, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள், பாரிவேல் பதிப்பகம்: பாளையங்கோட்டை
  10. லூர்து, தே, 2008, தமிழ்ப்பழமொழிகள்:அமைப்பு, பொருண்மை, செயல்பாடு, சென்னை: தமிழினி
  11. http://www.teamfours.com/library/books/details/29486.html[தொடர்பிழந்த இணைப்பு]
  12. லூர்து, தே, 2008, சூழலியம் பழமொழிகளை முன்வைத்து, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்: பாளையங்கோட்டை
  13. லூர்து, தே, 2008, சூழலியம் பழமொழிகளை முன்வைத்து, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்: பாளையங்கோட்டை
"https://tamilar.wiki/w/index.php?title=தே._லூர்து&oldid=403894" இலிருந்து மீள்விக்கப்பட்டது