நடுத் தீவு

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 00:22, 6 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:கென்யாவின் மக்கள் வசிக்காத தீவுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நடுத் தீவு, முதலைத் தீவு என்றும் அழைக்கப்படுவது (Central Island, also known as Crocodile Island) கென்யாவில் துர்க்கானா ஏரியின் நடுவில் அமைந்துள்ள ஒரு எரிமலைத் தீவு ஆகும். இது நடுத் தீவு தேசிய பூங்காவின் அமைவிடமாக உள்ளது, இது கென்யா வனவிலங்கு பணியகத்தால் நிருவகிக்கப்படுகிறது. [1]

நடுத் தீவு
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
அமைவிடம்கென்யா
பகுதிதுர்க்கானா ஏரி தேசியப் பூங்கா
கட்டளை விதிஇயற்கைக் களம்: (viii)(x)
உசாத்துணை801bis-002
பதிவு1997 (21-ஆம் அமர்வு)
விரிவுகள்2001
பரப்பளவு500 ha (1,200 ஏக்கர்கள்)
ஆள்கூறுகள்3°29′30″N 36°4′0″E / 3.49167°N 36.06667°E / 3.49167; 36.06667
Location of நடுத் தீவு in கென்யா.

பருந்துப் பார்வை

நடுத் தீவு ஒரு டசன் பள்ளங்களாலும் கூம்புகளாலும் ஆனது. அவற்றில் மூன்று சிறிய ஏரிகளும் உள்ளன. இரண்டு பெரிய ஏரிகள் ஒரு கிலோமீட்டர் அகலமும் சுமார் 80 மீ ஆழமும் கொண்ட பள்ளங்களை ஓரளவு நிரப்பியதாக உள்ளன. அவற்றின் கரைகள் கடல் மட்டத்திற்கு அருகில் உள்ளன. தீவின் மிக உயரமான இடம் 550 மீட்டர் உயரமாகும் என்றாலும், ஏரியின் மேற்பரப்பில் இருந்து காணக்கிட்டால் சுமார் 190 மீ உயரமாகும். பல சிறிய தீவுகள் பகுதியளவு நீரில் மூழ்கியதாக தீவின் விளிம்புகளில் உள்ளன. மேலும் கூம்புகளும், எரிமலை குமிழ்களும் தீவின் அருகே ஏரியின் மேற்பரப்புக்கு அடியில் காணப்படுகின்றன.

தீவில் உள்ள எரிமலைவாயின் செயல்பாடு மத்திய பள்ளத்தின் NE-to-SE விளிம்பில் குவிந்துள்ளது. எரிமலை வாயிலிருந்து கந்தக உமிழ்வுகள் 1930 களில் காணப்பட்டன. 1974 ஆம் ஆண்டில் உருகிய கந்தகத்தின் தீவிர உமிழ்வு மற்றும் நீராவி மேகங்கள் நிலப்பகுதியிலிருந்து காணப்பட்டன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நடுத்_தீவு&oldid=410335" இலிருந்து மீள்விக்கப்பட்டது