பாசையூர்

imported>Tom8011 பயனரால் செய்யப்பட்ட 06:52, 6 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பாசையூர், இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊர். இது, பாசையூர் கிழக்கு, பாசையூர் மேற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குள் அடங்குகின்றது. யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் இருக்கும் இப்பகுதி, மாநகரசபையின் 7ம் வட்டாரம் ஆகும்.[1][2][3] இவ்வூருக்கு மேற்கில் திருநகரும், வடக்கில் ஈச்சமோட்டை, கொழும்புத்துறை என்பனவும், கிழக்கில் கொழும்புத்துறையும், தெற்கில் யாழ்ப்பாண நீரேரியும் உள்ளன.

இங்கு கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். பாசையூர்ப் பகுதி மக்களிற் பலர் மீன்பிடித்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள். இங்கே 567 மீனவக் குடும்பங்கள் உள்ளன.[4]

வழிபாட்டிடங்கள்

பாசையூரில் கிறிஸ்து அரசர் தேவாலயம், அப்போஸ்தலிக்க தேவாலயம் ஆகிய கிறித்தவ வழிபாட்டிடங்கள் உள்ளன.[5]

மேற்கோள்கள்

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 22.
  2. "Pācaiyūr, Pācik-kuḻam, Pāsiyā-vẹva, Paḻam-pāci". TamilNet. June 28, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22589. 
  3. "Nallūr, Mūtūr, Campūr, Nallura, Palē-ūruva". TamilNet. August 8, 2007. https://www.tamilnet.com/art.html?artid=22952&catid=98. 
  4. Statistical Information of the Northern Province - 2014, Northern Provincial Council, 2014. p. 82.
  5. "யாழ் பிரதேச செயலக இணையத்தளம்". Archived from the original on 2022-04-13. Retrieved 2015-10-16.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=பாசையூர்&oldid=430321" இலிருந்து மீள்விக்கப்பட்டது