ஆள்கூறுகள்: 28°16′N 83°36′E / 28.267°N 83.600°E / 28.267; 83.600

பாக்லுங்

தமிழர்விக்கியிலிருந்து
Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:02, 20 பெப்பிரவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
வரைபடத்தை ஏற்றுகிறது....
28°16′N 83°36′E / 28.267°N 83.600°E / 28.267; 83.600
பாக்லுங்

நகராட்சி & மலை வாழிடம்
பாக்லுங் பஜார்
பாக்லுங் பஜார்
நாடு நேபாளம்
மாகாணம்கண்டகி
மாவட்டம்பாக்லுங் மாவட்டம்
நகராட்சிபாக்லுங் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்98.01 km2 (37.84 sq mi)
ஏற்றம்
1,020 m (3,350 ft)
மக்கள்தொகை
 (2021)
 • மொத்தம்56,102
 • அடர்த்தி570/km2 (1,500/sq mi)
 • Ethnicities
செத்திரி மகர் நேவார் பிராமணர் தக்லி தலித்
 • மதங்கள்
இந்து பௌத்தம் & இந்து-பௌத்த கலப்பின மக்கள்
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
33300
இடக் குறியீடு068
இணையதளம்baglungmun.gov.np/en
பாக்லுங் கடைவீதி
பாக்லுங் நகரத்திலிருந்து தவளகிரி காட்சி
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
வரவேற்பு பலகை

பாக்லுங் (Baglung), நேபாளம் நாட்டின் கண்டகி மாகாணம், பாக்லுங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இமயமலையில் 1020 மீட்டர் உயரத்தில், காளி கண்டகி ஆழ்பள்ளத்தாக்கில் உள்ள பாக்லுங் நகரம், மாகாணத் தலைநகரான பொக்காராவிற்கு வடமேற்கே 77.7 கிலோமீட்டர் தொலைவிலும்: முக்திநாத்திற்கு 160 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தில் காளி கண்டகி ஆறு பாய்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, பாக்லுங் நகரத்தின் மக்கள் தொகை 59,270 ஆகும். நேபாளி மொழியை 93.6% பேசுகின்றனர். மகர் மொழி 3.6%, நேபால் பாசா 1.9% மற்றும் பிற மொழிகள் 0.09% அளவில் பேசப்படுகிறது.[1]சராசரி எழுத்தறிவு 79.3% ஆக உள்ளது.[2]

மலை பிராமணர்கள் 31.6%, செத்திரி மக்கள் 24.6%, மகர் மக்கள் 15.5%, சர்கி மக்கள் 10.4%, காமி மக்கள் 5.1%, தோளி மக்கள் 4.7%, நேவார் மக்கள் 3.5%, தாக்கூரி மக்கள் 1.3% மற்றும் பிற இனக்குழுக்கள் 0.24% வாழ்கின்றனர்.[3]

இந்துக்கள் 92.9%, பௌத்தர்கள் 5.7%, இசுலாமியர்கள் 0.6%, கிறித்தவர்கள் 0.5%, ஆன்மவாதிகள் 0.1% மற்றும் பிறர் 0.2% உள்ளனர்.[4]

தட்ப வெப்பம்

பாக்லுங் நகரம் இதமான குளிரும், வெப்பமும் கொண்டது. கோடைக்கால அதிகபட்ச வெப்பம் 26.6 °C (79.9 °F) மற்றும் குளிர்கால அதிகபட்ச குளிர் 0 °C (32 °F) ஆக உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. NepalMap Language
  2. NepalMap Literacy
  3. NepalMap Caste
  4. NepalMap Religion
  5. "World-wide Agroclimatic Data of FAO (FAOCLIM)". Food and Agriculture Organization of United Nations. Retrieved 28 October 2024.
  6. "ネパール国 全国貯水式水力発電所マスタープラン調査 ファイナルレポート" (PDF). Japan International Cooperation Agency. Archived from the original (PDF) on 6 April 2024. Retrieved 28 October 2024.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாக்லுங்&oldid=430777" இலிருந்து மீள்விக்கப்பட்டது