ஆள்கூறுகள்: 26°56′10″N 78°32′31″E / 26.936°N 78.542°E / 26.936; 78.542

பாதேஷ்வர்

தமிழர்விக்கியிலிருந்து
76.32.47.150 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 18:15, 8 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பாதேஷ்வர்

பா பதேஷ்வர்

கிராமம்
பதேஷ்வர் கோயில் வளாகம்
அடைபெயர்(கள்): பதேஷ்வர்
பாதேஷ்வர் is located in உத்தரப் பிரதேசம்
பாதேஷ்வர்
அமைவிடம்
பாதேஷ்வர் is located in இந்தியா
பாதேஷ்வர்
பாதேஷ்வர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°56′10″N 78°32′31″E / 26.936°N 78.542°E / 26.936; 78.542
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஆக்ரா
ஏற்றம்
160 m (520 ft)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்6,041
மொழி
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
283104
வாகனப் பதிவுUP-80

பதேஷ்வர் (Bateshwar), வட இந்தியாவில் உள்ள உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் அமைந்த கிராமம் ஆகும். இக்கிராமம் சமணம் மற்றும் 101 சிவன் லிங்கக் கோயில்கள் கொண்டது. யமுனை ஆற்றின் கரையில் அமைந்த பதேஷ்வர் கிராமம், ஆக்ரா மற்றும் இட்டாவா நகரங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. இது ஆக்ராவிற்கு தென்கிழக்கே 79.5 கிலோ மீட்டர் தொலைவிலும்; இட்டாவாவிற்கு வடமேற்கே 67.4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. பதேஷ்வர் கிராமத்தில் ஒரு தொடருந்து நிலையம் உள்ளது.

இந்து & சமண ஆன்மீகத் தலங்கள்

நேமிநாதர் சிற்பம், பதேஷ்வர் சமணக் கோயில்

பதேஷ்வர் கிராமம், சமண சமயத்தின் 22வது தீர்த்தங்கரர் நேமிநாதர் பிறந்த தலம் ஆகும். இக்கிராமத்தில் 101 சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 101 சிவ லிங்கக் கோயில் உள்ளது. அடல் பிகாரி வாச்பாய் பிறந்த இக்கிராமத்தை ஆன்மீகச் சுற்றுலாத் தலமாக மாற்ற உ பி அரசு ரூபாய் 100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ஹெலிகாப்டர்கள் இறங்க ஹெலிபேட் அமைக்கப்படுகிறது. ஆக்ரா மற்றும் மதுராவுக்கான ஹெலிபோர்ட் சேவைகளை மேம்படுத்த இந்த திட்டம் உதவும்.[1]

போக்குவரத்து

பதேஷ்வர் கிராமத்தில் ஒரு சிறிய தொடருந்து நிலையம் உள்ளது. இது ஆக்ரா, இட்டாவா, காசீப்பூர், மைன்புரி நகரங்களுடன் இணைக்கிறது.[2][3]

குறிப்பிடத் தக்கவர்கள்

முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் பதேஷ்வர் கிராமத்தில் பிறந்தவர்.[4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாதேஷ்வர்&oldid=433304" இலிருந்து மீள்விக்கப்பட்டது