பாபட்லா - 2231
பாபட்லா - 2231 (BPT 2231) எனப்படும் இந்த நெல் வகை, பாபட்லா - 4358 (BPT 4358) மற்றும் IR 64 ஆகிய நெல் இரகங்களை பரம்பரை முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட, தென்னிந்தியப் பிராந்தியமான ஆந்திர மாநிலத்தின் நெல் இரகமாகும். "நடுவண் வகை வெளியீட்டுக் குழு (CVRC)" மற்றும் "மாநில வகை வெளியீட்டுக் குழு (SVRC)" ஆகியவையால் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, அக்சயா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]
| பாபட்லா - 2231 BPT 2231 |
|---|
| வேளாண் பெயர் |
| அக்சயா |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| பாபட்லா - 4358 X IR 64 |
| வகை |
| கலப்பின நெல் வகை |
| காலம் |
| 145 - 150 நாட்கள்[1] |
| மகசூல் |
| 6000 - 6500 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 2010 |
| வெளியீட்டு நிறுவனம் |
| CVRC / SVRC, பாபட்லா[2] |
| மாநிலம் |
| ஆந்திரப் பிரதேசம் |
| நாடு |
காலம்
நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 145 - 150 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. சம்பா சாகுபடி பருவத்தில் பயிரிடப்படும் இந்த நெல்வகை, இரண்டு போகப் பயிர் சாகுபடிப் பகுதிகளான குண்டூர் மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் பயிரடப்படுவதாக கருதப்படுகிறது.[1]
மகசூல்
பழுப்பு நிறத் தத்துப்பூச்சி (BPH) மற்றும் குலைநோய்க்கு சகிப்புத்தன்மை கொண்ட பாபட்லா - 2231, ஒரு எக்டேருக்கு சுமார் 6,000 முதல், 6500 கிலோ வரை மகசூல் தருவதாக கூறப்படுகிறது. மேலும் உறையாத மற்றும் சிதறாத, ஒட்டும் தன்மையற்ற தானியத்தை கொண்டதாகவும் கூறப்படுகிறது.[1]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Akshaya (BPT 2231)" (PDF). angrau.ac.in (ஆங்கிலம்) - ©2025. Retrieved 2025-08-18.
- ↑ Paddy varieties released from Agricultural Research Station, Bapatla