பாபட்லா - 2411
பாபட்லா - 2411 (BPT 2411) முன்மொழிவு எண்: (IET 23081)[4] எனப்படும் இந்த நெல் வகை, பாபட்லா - 5244 மற்றும் பாபட்லா - 4358 ஆகிய நெல் இரகங்களை பரம்பரை முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட, தென்னிந்தியப் பிராந்தியமான ஆந்திர மாநிலத்தின் நெல் இரகமாகும். "நடுவண் வகை வெளியீட்டுக் குழு (CVRC)" மற்றும் "மாநில வகை வெளியீட்டுக் குழு (SVRC)" ஆகியவையால் 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, சசுயா (Sasya) என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]
| பாபட்லா - 2411 BPT 2411 |
|---|
| வேளாண் பெயர் |
| சசுயா |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| பாபட்லா - 5244 X பாபட்லா - 4358 |
| வகை |
| கலப்பின நெல் வகை |
| காலம் |
| 140 - 145 நாட்கள்[1] |
| மகசூல் |
| 7,000 - 7,500 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 2020[2] |
| வெளியீட்டு நிறுவனம் |
| CVRC / SVRC, பாபட்லா[3] |
| மாநிலம் |
| ஆந்திரப் பிரதேசம் |
| நாடு |
காலம்
நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 140 - 145 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. சம்பா மற்றும் குறுவை சாகுபடி பருவங்களில், பாபட்லா - 3291 நெல் வகைக்கு பதிலாக ஆந்திர மாநிலத்தின் ஒற்றை மற்றும் இரு போகப் பயிர் சாகுபடி முறையில் பயிரிடப்படும் இந்த நெல்வகை, கிருஷ்ணா ஆற்றின் மேற்கு கழிமுகப் பகுதிகள் மற்றும் தெலுங்கானா மாநில நாகார்ஜுன சாகர் அணைப் பகுதிகள் போன்ற ஈரத்தன்மையுள்ள நிலங்களில் பெருமளவு பயிரடப்படுவதாக கருதப்படுகிறது.[1]
மகசூல்
தண்டு துளைப்பான், பழுப்பு நிற குலைநோய் பூச்சி (BPH), பழுப்பு நிறப் புள்ளி மற்றும் பாக்டீரியா இலை கருகல் (BLB) எதிர்ப்புத்திறன் கொண்ட பாபட்லா - 2411, ஒரு எக்டேருக்கு சுமார் 7,000 முதல், 7,500 கிலோ வரை மகசூல் தருவதாக கூறப்படுகிறது. நீர் அழுத்தத்தை தாங்கும் தன்மை, உப்புத்தன்மை மற்றும் காற்றில்லா முளைக்கும் திறன், ஒரு வாரம் செயலற்ற தன்மை மற்றும் சிதறாமல் இருப்பது போன்றவை இந்நெல்லின் சிறப்புகளாகும்.[1][4]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Sasya (BPT-2411) Page 9" (PDF). angrau.ac.in (ஆங்கிலம்) - ©2025. Retrieved 2025-08-21.
- ↑ Varieties released from RRU Bapatla
- ↑ Paddy varieties released from Agricultural Research Station, Bapatla
- ↑ 4.0 4.1 "Indian Rice Varietal Information Sasya (BPT-2411)". rice-garud.icar-web.com (ஆங்கிலம்) - ©2025. Retrieved 2025-08-21.