புளூட்டாக்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 01:39, 22 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (இளமைக் காலம்: clean up, replaced: எழுத்துக்களில் → எழுத்துகளில் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

புளூட்டாக் (Plutarch - பொ.ஊ. 46–120) ஒரு கிரேக்க வரலாற்றாளரும், வாழ்க்கை வரலாற்றாசிரியரும், கட்டுரையாளரும் ஆவார்.[1] புளூட்டாக், பியோசியாவில் இருந்த கரணியா என்னும் நகரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற குடும்பமொன்றில் பிறந்தார். இவ்விடம் டெல்பியில் இருந்து வடக்குத் திசையில் 20 மைல்கள் தொலைவில் உள்ளது.

புளூட்டாக்
(லூசியஸ்?) மெஸ்ட்ரியஸ் புளூட்டாக்கஸ்
Μέστριος Πλούταρχος
படிமம்:Portrait of a philosopher, maybe Plutarch, 2nd century BC, AM Delphi, 0135.jpg
பிறப்புபொ.ஊ. 46
கரணியா, பியோசியா
இறப்புபொ.ஊ. 120
டெல்பி, போசிஸ்
தொழில்வாழ்க்கை வரலாற்றாசிரியர், கட்டுரையாளர், மதகுரு, தூதுவர், நீதிபதி
தேசியம்கிரேக்கர்
கருப்பொருள்வாழ்க்கை வரலாறு
இலக்கிய இயக்கம்இடைக்காலப் பிளேட்டோனியம்,
ஹெலனிய இலக்கியம்

இளமைக் காலம்

பியோசியாவில் பிறந்த புளூட்டாக்கின் தந்தை பெயர் தெரிய வரவில்லை. எனினும் ஒன்றுவிட்டு ஒரு தலைமுறைகளில் ஒரே பெயர் இடும் கிரேக்கர்களின் வழக்கத்தை வைத்துப் பார்க்கும்போது அவரது பெயர் நிக்கார்க்கஸ் ஆக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இவர் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர். புளூட்டாக்கின் பாட்டனின் பெயர் லாம்பிறைஸ் (Lamprias) என புளூட்டாக்கின் மோராலியா என்னும் நூலில் தரப்பட்டுள்ளது. இவருக்கு எத்தனை பிள்ளைகள் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இவருடைய ஆக்கங்களில் ஆட்டோபுலுஸ், இரண்டாவது புளூட்டாக் என்னும் இரண்டு மகன்கள் பற்றி அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விருவர் தவிர சோக்லாரஸ் (Soklarus) என்னும் ஒருவர் பற்றியும் குறிப்புகள் காணப்படுவதால் இவரும் புளூட்டாக்கின் மகனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. புளூட்டாக்கின் மகள் எனக் கருதப்படக்கூடிய திமோக்சேனா (Timoxena) என்ற ஒரு பெண்ணின் பெயரும் இவரது எழுத்துகளில் உள்ளது.

பொ.ஊ. 66 ஆம் ஆண்டுக்கும் 67 ஆம் ஆண்டுக்கும் இடையில் புளூட்டாக் ஏதென்ஸ் அக்கடமியில் அம்மோனியஸ் என்பவரின் கீழ் கணிதத்தையும், மெய்யியலையும் கற்றார். இவருக்கு, சோசியஸ் செனேசியோ ( Soscius Senecio), ஃபண்டனஸ் போன்ற பல செல்வாக்குள்ள நண்பர்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் செனட்டர்கள். இவர் நடுநிலப் பகுதியில் பரவலாகப் பயணம் செய்துள்ளார். மைய கிரீஸ், ஸ்பார்ட்டா, கொறிந்த், பாட்ராஸ், சார்டெஸ், அலெக்சாந்திரியா, ரோம் ஆகிய இடங்களுக்கு இவர் சென்றுள்ளார்.

இவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கரணியாவிலேயே கழித்தார்.

படத்தொகுப்பு

-

மேற்கோள்கள்

  1. Dillon, J.M. (1996). The Middle Platonists: 80 B.C. to A.D. 220. Ithaca, NY: Cornell University Press. ISBN 978-0-8014-8316-5.
"https://tamilar.wiki/w/index.php?title=புளூட்டாக்&oldid=445208" இலிருந்து மீள்விக்கப்பட்டது