பேட்வா ஆறு

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 13:55, 31 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:பண்டைய இந்திய ஆறுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
25°55′N 80°12′E / 25.917°N 80.200°E / 25.917; 80.200

பேட்வா ஆறு (Betwa River) வட இந்தியாவில் ஓடும் ஆறு ஆகும். இது யமுனை நதியின் கிளை ஆறு ஆகும். இதன் மறு பெயர் வெட்ராவதி (Vetravati) ஆறு ஆகும். இது மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. இந்த ஆறானது கடைசியில் கென் ஆற்றுடன் இணைகிறது.

பேட்வா ஆறு
ஆறு
பேட்வா ஆறு
நாடு இந்தியா
மாநிலங்கள் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம்
நகரம் விதிஷா
உற்பத்தியாகும் இடம் விந்தியப் பகுதி
 - அமைவிடம் ஹோஸ்கங்காபாத் மாவட்டம், மத்தியப் பிரதேசம்
கழிமுகம் யமுனா
 - அமைவிடம் ஹமிர்பூர், உத்தரப் பிரதேசம்
 - ஆள்கூறு 25°55′N 80°12′E / 25.917°N 80.200°E / 25.917; 80.200

வரலாறு

சமஸ்கிருதத்தில் பேட்வா என்றால் வெட்ராவதி என்று பொருள். இந்த ஆற்றைப் பற்றி மகாபாரதத்தில் குறிப்புகள் உள்ளன. வெறாவதி என்பதற்கு சுக்திமதி என்று பொருள். இந்த நதிக் கரையானது இடம்பெயரும் நீர்ப் பறவைகளுக்கு முக்கிய நீர் நிலையாக விளங்குகிறது.[1]

நதி நீர் வாரியம்

இந்த ஆறானது மொத்தம் 590 கிலோமீட்டர்கள் நீளமுடையது. இதில் 232 கிலோமீட்டர்கள் மத்தியப் பிரதேசத்திலும் மீதி 358 கிலோமீட்டர்கள் உத்திரம் பிரதேசத்திலும் ஓடுகிறது. உத்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் அரசுகளுக்கு இடையேயான உடன்படிக்கையின் படி 1973 ஆம் ஆண்டு பேட்வா நதிநீர் வாரியம் அமைக்கப்பட்டது.[2]

நதிகள் இணைப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் பேட்வா ஆறானது, கென் ஆற்றுடன் இணைக்க 25 டிசமப்ர் 2024 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.[3][4] இந்த ஆறுகளின் இணைப்பால் மத்தியப் பிரதேசத்தில் வாழும் 44 இலட்சம் மக்களும்; உத்தரப் பிரதேசத்தில் வாழும் 21 இலட்சம் மக்களும் பயன் பெறுவர். பேட்வா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மடாடிலா அணையானது மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் நிருவாகத்தின் கீழ் வருகிறது.[5]

அணைகள்

இந்த ஆற்றின் குறுக்கே,

ஆகிய அணைகள் கட்டப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Shukla, D.C. 1994 Habitat characteristics of wetlands of the Betwa Basin, India, and wintering populations of endangered waterfowl species. Global wetlands, pp. 863-868
  2. Betwa River Board இந்திய நீர் ஆற்றல் அமைச்சகத்தின் இணையதளம்.
  3. Modi lays foundation stone of Ken-Betwa river linking project
  4. நாட்டின் முதல் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்
  5. Betwa River Board இந்திய நீர் ஆற்றல் அமைச்சகத்தின் இணையதளம்.
"https://tamilar.wiki/w/index.php?title=பேட்வா_ஆறு&oldid=450349" இலிருந்து மீள்விக்கப்பட்டது