பொட்டு

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 07:06, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பொட்டு தெற்கு ஆசியா, (குறிப்பாக இந்தியா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை மற்றும் மொரிசியசு)[1] மற்றும் தென்கிழக்காசியாவில் நெற்றியில் அணியும் அலங்காரமாகும். வழமையாக பெண்களால் முன்நெற்றியில் புருவங்களுக்கிடையே சிவப்பு வண்ணத்தில் வட்ட வடிவில் இது வைத்துக் கொள்ளப்படுகின்றது. இருப்பினும் மற்ற வண்ணங்களிலும் மற்ற வடிவமைப்புகளிலும் சின்னங்களுடனோ இல்லாமலோ நகையுடனோ இது அணிந்து கொள்ளப்படுகிறது. திருமணமான பெண்கள் குங்குமத்தினால் பொட்டு இட்டுக் கொள்வதும் விதவைகள் வெறும் நெற்றியுடன் இருப்பதும் பண்டைய பண்பாடாக இருந்தது; தற்போது உடைக்கு ஏற்பவே அணிந்து கொள்ளப்படுகின்றது.

படிமம்:Bindi.pottu.battu.jpg
அலங்காரப் பொட்டு

வெவ்வேறு இந்திய மொழிகளில்

இந்தியாவின் பிற பகுதிகளில் "ஓர் துளி, சிறு துகள், புள்ளி" எனப் பொருள்படும் சமசுகிருதச் சொல்லான பிந்து விலிருந்து பெறப்பட்ட பிந்தி (இந்தி: बिंदी) என அழைக்கப்படுகின்றது. அண்மைக்காலங்களில் அணியத் தயாரானநிலையில் பசையுடன் கூடிய ஒட்டுப் பொட்டுக்கள் (பொது வழக்கில் இசுடிக்கர் பொட்டுக்கள்) விற்கப்படுகின்றன.[2]

காட்சிக்கூடம்

மேற்சான்றுகள்

  1. Das, Subhamoy. "Bindi: The Great Indian Forehead Art". Retrieved 2009-02-16.
  2. "Dazzling bindis". MSN India. 10 October 2011. Archived from the original on 2011-10-12. Retrieved 2011-10-20.

வெளியிணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=பொட்டு&oldid=452199" இலிருந்து மீள்விக்கப்பட்டது