பொறையாறு

imported>Balu1967 பயனரால் செய்யப்பட்ட 03:29, 30 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பொறையாறு சங்ககால ஊர்களில் ஒன்று. இக்காலத்தில் தரங்கம்பாடியை அடுத்து உள்ள பொறையாறு என்னும் ஊர்தான் அது. சங்ககாலத்தில் பெரியன் என்னும் பெயர் கொண்ட மன்னன் இங்கு இருந்துகொண்டு ஆண்டுவந்தான். இவன் சிறந்த கொடைவள்ளல். இவ்வூரில் குருகு இனக் கொக்குகள் மிகுதி.[1] இந்த ஊர் நெல்வளம் மிக்கது. [2]

ஒருகாலத்தில் வேங்கட மலைக்கு வடக்கிலிருந்த நல்ல நெல் விளையும் நிலத்தைக் கொண்ட கல்லாடம் என்னும் ஊரில் வாழ்ந்த கல்லாடனார் என்னும் புலவரின் குடும்பம் பசியால் வாடியபோது இந்த ஊர் பொறையாற்றுக்கு வந்து அரசன் பெரியன் கொடையால் தம் பசியைப் போக்கிக்கொண்டது.[3]

மேற்கோள்கள்

  1. தாழைச் சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய இறவு ஆர் இனக்குருகு இறை கொள இருக்கும் நறவு மகிழ் இருக்கை நற்றேர்ப் பெரியன் கட்கமழ் பொறையாறு அன்ன என் நற்றோள் - உலோச்சனார் பாடல் நற்றிணை 131
  2. ததைந்த புனலின் செழுநகர் வரைப்பு … வேலி ஆயிரம் விளைக நின் வயலே - கல்லாடனார் பாடல் புறநானூறு 391 சிதைந்த நிலையில்
  3. வேங்கட வைப்பின் வடபுலம் பசித்து என ஈங்கு வந்து இறுத்த என் இரும்பேர் ஒக்கல் தீர்கை விடுக்கும் பண்பு … முதுகுடி கல்லாடனார் பாடல் புறநானூறு 391 சிதைந்த நிலையில்
"https://tamilar.wiki/w/index.php?title=பொறையாறு&oldid=453157" இலிருந்து மீள்விக்கப்பட்டது